வெள்ளி, 27 பிப்ரவரி, 2015


'மோடி ஆட்சியில் மத ரீதியான வன்முறை அதிகரிப்பு: சர்வதேச மனித உரிமை அமைப்பு புகார்

லண்டன்: மோடி பிரதமரான பிறகு இந்தியாவில் மத ரீதியான வன்முறை அதிகரித்துவிட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி குற்றம்சாட்டியுள்ளது. 2015&ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில் மோடி அரசை அம்னெஸ்டி அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மதரீதியான மோதல் இந்து முஸ்லீம் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அந்த அமைப்பு கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்து அமைப்புகள் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றுவதாக எழுந்துள்ள புகார்களையும் சுட்டிக்காட்டியுள்ளது. 

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத ரீதியான வன்முறை தொடர்ந்து அதிரித்து வருவதாகப் கூறியுள்ள அம்னெஸ்டி ஊழல், சாதி ரீதியான பாகுபாடு மற்றும் வன்முறை போன்றவை பல பகுதிகளிலும் பரவி இருப்பதாக தெரிவித்துள்ளது. மக்களின் தனிப்பட்ட உரிமை மற்றும் கருத்துரிமையை ஒடுக்கும் நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அமைப்பு புகார் கூறியுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்னெஸ்டி அமைப்பு இந்த அவரச சட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தங்களது சொந்த இடங்களில் வெளியேற்றப்படும் ஆபத்து இருப்பதாக கூறியுள்ளது. 

குறிப்பாக மலை, அணைகட்டுகளின் அருகில் வசிக்கும் ஆதிவாசிகள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தனியார் நிறுவனங்களின் திட்டங்களால் பாதிக்கப்படுபவர்களின் கவலைக்கூட கேட்க மோடி அரசு தவறிவிட்டதாகவும் அம்னெஸ்டி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.'

மோடி ஆட்சியில் மத ரீதியான வன்முறை அதிகரிப்பு: சர்வதேச மனித உரிமை அமைப்பு புகார்
லண்டன்: மோடி பிரதமரான பிறகு இந்தியாவில் மத ரீதியான வன்முறை அதிகரித்துவிட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி குற்றம்சாட்டியுள்ளது. 2015&ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில் மோடி அரசை அம்னெஸ்டி அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மதரீதியான மோதல் இந்து முஸ்லீம் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அந்த அமைப்பு கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்து அமைப்புகள் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றுவதாக எழுந்துள்ள புகார்களையும் சுட்டிக்காட்டியுள்ளது.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத ரீதியான வன்முறை தொடர்ந்து அதிரித்து வருவதாகப் கூறியுள்ள அம்னெஸ்டி ஊழல், சாதி ரீதியான பாகுபாடு மற்றும் வன்முறை போன்றவை பல பகுதிகளிலும் பரவி இருப்பதாக தெரிவித்துள்ளது. மக்களின் தனிப்பட்ட உரிமை மற்றும் கருத்துரிமையை ஒடுக்கும் நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அமைப்பு புகார் கூறியுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்னெஸ்டி அமைப்பு இந்த அவரச சட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தங்களது சொந்த இடங்களில் வெளியேற்றப்படும் ஆபத்து இருப்பதாக கூறியுள்ளது.
குறிப்பாக மலை, அணைகட்டுகளின் அருகில் வசிக்கும் ஆதிவாசிகள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தனியார் நிறுவனங்களின் திட்டங்களால் பாதிக்கப்படுபவர்களின் கவலைக்கூட கேட்க மோடி அரசு தவறிவிட்டதாகவும் அம்னெஸ்டி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

Scholarship for School Student


'Please share this post.........'

இந்த மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா..???



//விழிப்புணர்வு பதிவு//
NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.
FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும்
கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில்
ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
VICKS பல ஐரோப்பிய நாடுகளில்,
அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில்
விளம்பரபடுத்தபட்டு வருகிறது.
LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல,
மேலும், கழிவறை சோப்பும் அல்ல.
ஆனால், அது ஒரு cabolic சோப்பு,
மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது.
ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ?
மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?
COKE மற்றும் PEPSI ஆகியவை,
உண்மையில், கழிவறையை சுத்தம்
செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம்
கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதனால், அதன் விற்பனை, இந்திய
பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ,
இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா?
வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட்,
காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA
INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல்,
பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த
பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது.
அது, விலங்குகள் உணவாகும். இந்த
கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள்
தயாரிக்கிறார்கள்.
ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்
பச்சனுக்கு பத்து மணி நேர
தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள்,
அது கெட்டு போக காரணம், coke மற்றும்
பெப்சி குடித்ததே என்று.
அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய
விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631
என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது.
இது, பன்றி, கோழி இறைச்சியில்
இருந்து தயாரிக்கபடுகிறது.
● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள்
உணவு பாக்கெட்களில் கானபட்டால்,
அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
● Note – இந்த code களை, பெரும்பாலான
வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில்
காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ்,
பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும்
மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல
தயாராகுமே, அதேதான்)
● நுகர்வோரே,
விழித்து கொள்ளுங்கள் !!!
● மாகி யில், (maggie ) flavor (E-635 ) என்ற
code இருக்கும்.
● கூகிள் இல், கீழ்கண்ட code களையும்
தேடி பாருங்கள், இவை அனைத்துமே,
ஒவ்வொன்றாய் குறிக்கும் :-
E100, E110, E120, E140, E141, E153, E210, E213,
E214, E216, E234, E252, E270, E280, E325, E326,
E327, E334, E335, E336, E337, E422, E430, E431,
E432, E433, E434, E435, E436, E440, E470, E471,
E472, E473, E474, E475, E476, E477, E478, E481,
E482, E483, E491, E492, E493, E494, E495, E542,
E570, E572, E631, E635, E904.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக!



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.
சொர்க்கத்தைத்தர வேண்டுமென மூன்று தடவை யாரேனும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால்,
யாஅல்லாஹ்! அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது.
நரகத்தைவிட்டும் காப்பாற்ற வேண்டுமென மூன்று தடவை யாரேனும் -அல்லாஹ்விடம்- பிரார்த்தித்தால்,
யாஅல்லாஹ்! நரகை விட்டும் இவரைக் காப்பாற்றுவாயாக! என நரகம் கூறுகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூற்கள் : திர்மிதீ 2495, நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்)

ஜனாஸா தொழுகை



ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்....
அவர்களுக்காக .....
1.முதல் தக்பீருக்குப் பின்,
_____________________________
முதல் தக்பீர் கூறிய பின் ....
அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும்.
ஆதாரம்:- புகாரி, 1335
2.இரண்டாம் தக்பீருக்கு பின்,
_______________________________
இரண்டாம் தக்பீர் கூறிய பின் ......
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்
”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.
ஆதார நூல்:- பைஹகி ,4/39
3,4 .மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்....
_________________________________
இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.
அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார்
அறிவிப்பவர்:- அவ்ஃப் பின் மாலிக்(ரலி)
முஸ்லிம்: 1601
பொருள்: இறைவா..!
இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!
இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!
இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!
பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!
அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!
கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
குறிப்பு:
இதை மற்றவர்களும் பயன் பெற உதவுங்கள்

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker



ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன். அதிர்ச்சியாக இருந்தது.
PLU code (price lookup number) இதனை வைத்து நாம்
சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.
எவ்வாறு அறிவது:
1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது... (நான் அப்டியே shock ஆகிட்டேண் )
2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.
3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.
இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.
அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்து விட்டு சாப்பிடுங்க..!!

MK Patti - Medical Camp




Thanks: Sadiq

புதன், 25 பிப்ரவரி, 2015

சிவில் பொறியாளருக்கு உதவும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள்


சிவில் பொறியாளருக்கு உதவும் 
அதி முக்கிய 12 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள்


சினிமா டிக்கெட், க்ஷாப்பிங், மேட்ரிமோனியல்,டேட்டிங், சாட்டிங், பத்திரிகை, டி.வி, ஜி.பி.ஆர்.எஸ், வெதர் என எக்கச்சக்கமான ஆப்ஸ்கள் இறைந்து கிடக்கின்றன. தமிழில் டைப் செய்வதற்கு என தொடங்கி பேட்டரியின் ஆயுளை நீட்டிப்பதற்கு வரை லட்சபோ லட்ச ஆப்ஸ்கள் உள்ளன என்னும்போது, நமது சிவில் பொறியியலுக்கும் பல நூறு உபயோகமான ஆப்ஸ்கள் உள்ளன என்பது பலரும் அறியாத தகவல். அதில் மிக முக்கியமான 12 ஆப்ஸ்களை மட்டும் இங்கே தொகுத்து தந்திருக்கிறோம். இவற்றுள் பெரும்பாலானவை இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் இவற்றை உங்கள் ஆண்ட்ராய்டு போனில் தரமிறக்கிக் கொள்ள இங்கே குறிப்பிட்டிருக்கும் ஆப்ஸ் பெயரை கூகுளில் சென்று டைப் செய்தாலே போதும், மிக எளிதாக அவற்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

ஆப்ஸ் 1 : Civil Calculator
இது சாதாரண கால்குலேட்டர் அல்ல. சிவில் பொறியியலில் உள்ள அனைத்து விதமான விதிகள், சமண்பாடுகள், ஃபார்முலாக்களுக்கு ஏற்றபடியான பல்வேறு கணக்கீடுகளை சிவில் பொறியியல் பயிலும் மாணவர்களும், பொறியாளர்களும் பயன்படுத்த வேண்டி வரும். அதற்கென தனியாக பணம் கொடுத்து கால்குலேட்டரை வாங்குவானேன்? இலவசமாக கிடைக்கும் இந்த சிவில் கால்குலேட்டர் ஆப்ஸை உங்கள் ஆண்ட்ராய்டில் தரவிறக்கிக் கொண்டால் போயிற்று.

குறைந்தபட்ச வசதிகள் உடைய அடிப்படை ஆண்ட்ராய்டு போன்களிலேயே இது இயங்கும். இடத்தையும் அடைத்துக் கொள்ளாது. இதன் அளவு 595KB.

ஆப்ஸ் 2 : Civil Engineering Pack
முன்னது இலவசம். ஆனால், இதற்கு 1000 ரூபாய் செலவாகும். இதன் வேலை அப்படி. சுமார் 574 விதமான கால்குலேட்டர்கள் மற்றும் கன்வெர்ட்டர்கள் செய்யும் வேலையை இந்த ஆப்ஸ் தன்னந்தனியாக செய்து முடிக்கும். 3 எம்.பி அளவுடைய இந்த ஆப்ஸின் மூல
மாக பீம்கள், காலம்கள், தூண்கள், கான்கிரீட், சர்வே, மண் முதற்கட்ட வேலைகள், ஸ்ட்ரக்சுரல் பொறியியல் கணக்கீடு, பாலங்கள், நெடுஞ்சாலை மற்றும் மர வேலைகள் போன்ற பலவிதமான கட்டுமானத்துறைப் பணிகளுக்கு ஏற்ற கணக்கீடுகளை இந்த ஆப்ஸின் மூலமாக எளிதாக செய்ய முடியும்.

ஆப்ஸ் 3 : Quick Civil
இதன் விலை நூற்று சொச்சம்தான். அளவோ 380லுய தான். அடிப்படை சிவில் பொறியாளர்களுக்கான கணக்கீடுகளை படத்துடன் விளக்குகிற வசதிகள் இதில் உள்ளன. சிவில் மாணவர்களின் புராஜெக்டுகளுக்கும் அசைன்மெண்டுக்கும் பயன்படுகிற இந்த க்விக் சிவில் அப்ளிகேக்ஷன் களப்பணியாற்றும் பொறியாளருக்கும் மிக்க பயன் தரும். முன்னர் கண்ட சிவில் கால்குலேட்டர் ஆப்ஸை விட அட்வான்ஸானது இது.

ஆப்ஸ் 4 : Reinforced Concrete Calculator
உண்மையில் காஸ்ட்லியான விலை வைத்து விற்க வேண்டிய இந்த ஆப்ஸ் இலவசமாக கிடைப்பது வரவேற்கத் தக்கது. இந்த ஆப்ஸ் களப்பணியில் ஈடுபட்டிருக்கும் சிவில் பொறியாளர்களுக்கு பீம்கள், காலம், சுவர், கான்கிரீட் பலகை போன்றவற்றை அமைப்பதற்கு தேவையான கான்கிரீட் கணக்கீடுகளுக்கு மிகவும் உதவிகரமானது.
லைவ் லோடு, டெட் லோடு ஆகியவற்றின் லோடு பேரிங் திறனை அக்குவேராக ஆணி வேராக அலசி சொல்லிவிடும். 912லுய அளவுடைய இந்த ஆப்ஸை இயக்குவதற்கு உங்கள் போனின் இயங்குதளம் 2.1 யை விட அதிகமாக இருக்க வேண்டும். இதுவரை உலகெங்கும் இந்த ஆப்ஸை 45,000 க்கும் மேற்பட்டோர் தரவிறக்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆப்ஸ் 5 : Concrete Calculator
கான்கிரீட் தொடர்பான எந்த வேலையாக இருந்தாலும் அதற்கான கணக்கீடுதான் மிகவும் அவசியம். எந்த கட்டிடத்திற்கு, என்ன வகையான கட்டிட உறுப்பிற்கு என்ன அளவில் கான்கிரீட் இடப்பட வேண்டும் என்பதும், கான்கிரீட்டிற்கு தேவையான மூலப்பொருட்கள் எவ்வளவு தேவைப்படும் என்பதும், தம்முடைய கற்றறிந்த பாடம் மற்றும் அனுபவப் பாடம் மூலமாகவும் கணக்கிடலாம். அல்லது கான்கிரீட் கான்கிரீட் கால்குலேட்டர் ஆப்ஸ் மூலமாகவும் கணக்கிடலாம். பாலங்கள், தூண்கள், நுழைவு வாயில்கள், காம்பவுண்டுகள், தரைப்பரப்புகள் போன்ற பலவித உபயோகங்களுக்கும் இதன் கணக்கீடுகள் உதவும்.

ஆப்ஸ் 6 : BeemDesign
இது ஒரு வடிவமைப்புச் சார்ந்த அப்ளிகேக்ஷன். பலவிதமான கட்டிடங்களுக்கு ஏற்ற பீம்களை வடிவமைக்கும் உத்திகளை சொல்லித்தரும் இந்த அப்ளிகேக்ஷனும் இலவசமாக கிடைக்கிறது. கட்டிட வகைகளையும், பீம்களின் உபயோகத்தையும், எந்த மாதிரியான இடத்தில் பீம்கள் வருகிறது என்பதையும், அப்லோட் செய்துவிட்டால் நீங்கள் எதுபோன்ற பீம்களை வடிவமைக்க வேண்டும் என்பதை உங்கள் உள்ளங்கை போனில் தெரிந்து கொள்ளலாம்.

ஆப்ஸ் 7 :Frame Design
சிவில் பொறியியல் உலகில் பரபரப்பாக பேசப்படும் முக்கிய ஆப்ஸ் இது. நீங்கள் ஒரு சிவில் பொறியாளராகவோ, ஆர்கிடெக்டாகவே அல்லது பொறியியல் மாணவராகவோ இருந்தால் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இந்த ஆப்ஸ் நிச்சயம் இருக்க வேண்டும். இதன் வேகமான எளிதில் புரியும்படியான கணக்கீடுகளால் இது கட்டிட வடிவமைப்பு பயிலும் மாணவர்களுக்கு கையேடாக திகழ்கிறது.

ஆப்ஸ் 8 : AndTruss2D
மேலே கண்ட ஃபிரேம் டிசைன் வடிவமைப்பு ஆப்ஸின் தம்பியாக இதனை சொல்லலாம். அளவிலும், செயல்பாட்டிலும், பயன்பாட்டிலும் இது ஃபிரேம் டிசைனை ஒத்திருக்கிறது.
புதிதாக வடிவமைப்பு பயிலும் மாணவர்கள் அல்லது வடிவமைப்பில் அடிப்படைகளை கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு இது மிகவும் ஏற்றது. 1.2 எம்.பி அளவுடைய இந்த ஆப்ஸ் பாலங்கள், அணைகள், தொழிற்சாலைகள் போன்ற கட்டுமானங்களை வேண்டிய அளவுகளில் வடிவமைத்து பார்ப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

ஆப்ஸ் 9 : Civil Engineering Dictionary
சிவில் பொறியியல் அகராதி என்றதும் ஆங்கிலம் தமிழ் அகராதி என நினைக்க வேண்டாம். கடினமாக ஆங்கில கலைச்சொற்களை உங்களுக்கு புரியும் வகையில் எளிதான ஆங்கிலத்தில் விளக்கவுரையுடன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்துறை சார்ந்த பணிகள் மட்டுமன்றி பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள், துணைப்பொருட்கள், சாதனங்கள், பணி முறைகள், செயல் முறைகள் ஆகியவற்றை இந்த ஆப்ஸின் மூலமாக அறிந்து கொள்ளலாம். ஏறத்தாழ 20,000 க்கும் மேற்பட்ட சிவில் பொறியியல் தொடர்பான சொற்கள் அடங்கிய இந்த அகராதியில் ஏகப்பட்ட வரையறைகளும் உண்டு. பொழுதுபோக்காக ஃபேஸ்புக் பக்கம் ஒதுங்கும் சிவில் மாணவர்கள் இந்த ஆப்ஸை தங்களது போனில் டவுன்லோட் செய்துகொண்டு அவ்வப்போது சொற்களுக்கான விளக்கங்களை படித்து வந்தால் அவர்களது பொறியியல் அறிவு மிளிரும்.

ஆப்ஸ் 10 : Simple & Easy Civil Engineering
சிவில் இன்ஜினியரிங் சிம்பிள் அண்ட் ஈஸி என்கிற இந்த ஆப்ஸ் கட்டுமானப் பொறியாளர் அனைவருக்கும் ஏற்றது. சர்வேயிங், லெவலிங், மேப்பிங் போன்ற எல்லாவகை சிவில் பொறியியல் பணிகள் தொடர்பான செயல் திட்டங்களையும் பணி முறைகளையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது. மிக சொற்ப விலையில் இணையதளத்தில் கிடைக்கிற இந்த அப்ளிகேக்ஷனை இதுவரை 175 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.

ஆப்ஸ் 11 :Engineering Libraries
இதுவும் ஒரு கற்றுக் கொடுக்கும் வகையைச் சேர்ந்த ஆப்ஸ்தான். முற்றிலும் இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்ஸ் சிவில் பொறியியலின் அடிப்படை விக்ஷயங்களான பல்வேறு விவரங்களை கணக்கீடுகளோடு விளக்கமாக நமக்கு எடுத்துரைக்கிறது.
ஸ்டீல், கான்கிரீட், மண், மரம் மற்றும் அனைத்துவிதமான மூலப்பொருட்களை பயன்படுத்தும் விதத்தையும் கட்டிட வடிவமைப்பு குறித்த பல்வேறு முக்கிய அம்சங்களையும் கணக்கீடுகள் மற்றும் மாதிரி படங்களுடன் விளக்குகிறது.

ஆப்ஸ் 12 : Gate Civil Question Bank
இது முழுக்க முழுக்க சிவில் பொறியியல் மாணவர்களுக்கும் அரசு வேலைக்கு முயலும் சிவில் பொறியாளர்களுக்கும் மிகவும் அத்தியாவசியமானது. 2003 முதல் தொடங்கி 2013 வரையிலான சிவில்துறை வினாக்கள் அடங்கிய இந்த ஆப்ஸிற்கு எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் தகும். ஆனால், இது இலவசமாக கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டிலும் பல நூறு கேள்விகள் அடங்கியுள்ளன. உங்களுக்கு தேவையான ஆண்டை தொட்டால் அந்த ஆண்டிற்குரிய கேள்விப் பட்டியல் விரிகின்றன. உங்களுக்கு தேவையான கேள்விகளை தேர்ந்தெடுத்தால், கேள்வி திரையில் மின்னுகிறது. அதற்குரிய சரியான விடை மறைந்திருப்பதும் நீங்கள் விரும்பினால் மட்டுமே சரியான விடை திரையில் தெரிவதும் என ஒரு அச்சுப்புத்தகத்தை விட பன் மடங்கு மேலானதாக இந்த ஆப்ஸ் விளங்குகிறது. உங்களுக்கு மட்டுமல்லாது சிவில் பொறியியல் பயில்பவர்களுக்கும் சிபாரிசு செய்யலாம்.

Go to Link :
https://play.google.com/store/search?q=civil+engineering+apps&c=apps

you don't have - Two Wheeler , license/ papers

சிடி ஸ்கானர் மூலம் பார்த்தபோது, ஒரு புத்தத் துறவி


கையில் நச்சென்று ஆணியடித்தது போல ஒரு தகவல் சொல்கிறேன் கேளுங்கள்.
1100 வருடங்கள் பழமையான புத்தர் சிலையொன்றைப் பரிசோதனைக்காக ஹாலந்து நாட்டுக்கு கொடுத்திருந்தது சீனா. கிட்டத்தட்ட கௌதம புத்தர் அமர்ந்திருக்கும் நிலையில் அந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிலையைப் பெற்றுக்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அதை CT Scan செய்து பார்த்தபோது, திகைத்துப் போய்விட்டனர். காரணம் அந்தச் சிலைக்குள், ஒரு மனிதன் தவம் செய்த நிலையில் மம்மியாக (Mummy) அடக்கம் செய்யப்பட்டிருந்தார்.
சிடி ஸ்கானர் மூலம் பார்த்தபோது, ஒரு புத்தத் துறவி, தியானம் செய்யும் நிலையில் உடல் உள்ளுறுப்புகள் அகற்றி, மம்மியாக்கப்பட்டுப் பின்னர் சிலையாக வடிவமைக்கபட்டது தெரிய வந்துள்ளது. 11ம் நூற்றாண்டளவில் வாழ்ந்து வந்த பௌத்த துறவியும், குருவுமான 'லீக்குவான்’ (Master Liuquan) என்பவரே இப்படி அடக்கம் செய்யப்பட்டவர் என்கிறார்கள்.
-ராஜ்சிவா-

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

தாயத்



மக்கா ஹரம்ஷரீப்பிள் உள்ள இமாம் ஒருவர் தாயத்து கட்டிவந்த ஒரு நபருக்கு தாவா செய்து தாயத்தை கலற்றினார் அல்ஹம்துலில்லாஹ்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
எவன் ஒருவன் தாயத்தை தொங்க விடுகிறானோ அவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டான்
அஹ்மத்-16781

கடைகளில் தேன்,காத்திருக்கும் ஆபத்து



Saravanakumar Velusamy

‪#‎அதிர்ச்சியூட்டும்_உண்மைசெய்தி‬-பகிர்ந்து தடுப்போம் முடிந்தால் விழிப்புணர்வு கொடுப்போம்
இந்தியர்களின் உயிரை பற்றி எங்களுக்கு கவலை இல்லை...
இப்படி கூறுவது அமெரிக்காவோ, சீனாவோ, பாகிஸ்தானோ அல்ல... நம்மை ஆளும் மத்திய அரசுதான். என்ன அதிர்ச்சியா இருக்கா ? அதைவிட பெரிய அதிர்ச்சி நம்ம உடலுக்கு நல்லது என்று நாம் விரும்பி சாப்பிடும் தேனால்தான் பெரிய ஆபத்தே இருக்கு.
டெல்லியில் இருந்து செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழல் மையம் சமீபத்தில் நமது நாட்டில் விற்கப்படும்
‪#‎ஆய்வு‬
12 பிரபல நிறுவனங்களின் தேன்களை ஆய்வு செய்தது. அது என்னென்ன நிறுவனங்கள் என்று முதலில் பார்ப்போம்.
டாபர் (Dabur),
பைதியான்ந் (Baidyanth),
பதஞ்சலி ஆயுர்வேதா (Patanjali Ayurveda),
காதி(Khadi) மற்றும்
ஹிமாலாயா (Himalaya) உள்ளிட்ட நிறுவனங்கள்தான்.
‪#‎அதிர்ச்சி_முடிவுகள்‬
இந்த நிறுவனங்கள் சார்பில் விற்கப்படும் தேன் பாட்டீல்களில் தடை செய்யப்பட்ட ஆன்டி பயாடிக் எனப்படும் குளோரோபெனிகல், சிப்ரோ பிளாக்சின் மற்றும் எரித்ரோமைசின் போன்றவற்றின் குண நலன்கள் அதிகளவில் காணப்படுகின்றன என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த வகை ஆன்டி பயாடிக்கினால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர் சத்யா அச்சத்துடன் எச்சரிக்கிறார்.
‪#‎வெளிநாடுகளில்_தடை‬
இதனால்தான் இந்திய வகை தேன்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தடை உள்ளதாகவும், சர்வதேச தரத்திற்கு இந்திய நிறுவனங்களின் தேன்கள் இல்லை என்றும் அறிவியல் மற்றும் சுற்றுபுறத்துறை மையத்தின் துணை இயக்குனர் சந்திர பூஷன் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்.
ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 2 நிறுவனங்களின் தேனிலும் இதுபோன்று மனித உடலை பாதிக்கும் வகையில் உள்ளது என்றும், அதனை அந்நாட்டு அரசே தடை செய்துள்ளது என்றும், ஆனால் அவை சர்வசாதரணமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது என்றும் அவர் கவலையுடன் கூறுகிறார்.
இப்பிரச்சினை குறித்து மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களிடம் எடுத்து கூறியபோது, நாங்கள் தேனை தயாரிப்பதில்லை என்றும், அதனை வெளி மார்க்கெட்டில் வாங்கி எங்களது நிறுவனங்களின் ஸ்டிக்கரை மட்டும் ஒட்டி விற்பனை செய்வதாக அந்நிறுவனங்களின் அதிகாரிகள் தங்களிடம் அலட்சியமாக தெரிவிக்கின்றனர் என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குனர் சுனிதா நரேன் கூறினார்.
இந்த தகவல் எல்லாம் மத்திய அரசுக்கு தெரியும் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார். இதனால்தான் மேலே கூறியபடி இந்திய உயிர்களை பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை என்று நாம் ஆணித்தரமாக கூறினோம். சரி இவர் எப்படி ஆணித்தரமாக மத்திய அரசுக்கு தெரியும் என்று கூறுகிறார் என பார்ப்போம்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்திய தேன்கள் சர்வதேச தரத்திற்கு இல்லை என ஏற்றுமதி நிறுவன ஆய்வில் கூறப்பட்டுள்ளது என்றும் ஆனால் அதனை பற்றி மத்திய அரசு சிறிதும் கவலைப்படவில்லை என்றும் சுனிதா நரேன் தெரிவித்துள்ளார். ஆனால் இவைகளை உள்ளூர் சந்தையில் விற்க மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என அவர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.
இந்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் உள்ள 27 நாடுகளும் இந்திய வகை தேன்களுக்கு தடை விதித்துள்ளன. ஆனால் இந்தியாவில்...? எதை நம்பி வாங்குவது எதை சாப்பிடுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு பதில் அளிக்குமா மத்திய அரசு ? பொறுத்திருந்து பார்ப்போம்.
உங்களுக்காக இருவன் உங்களில் ஒருவன்
சரவணக்குமார் வே கிராமத்து இளைஞன்
உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என தெரிந்தே இத்தகைய பொருட்களை தடைசெய்யாமல் விற்க மத்திய,மாநில அரசுகள் அனுமதிப்பது ஏன்
மக்களாட்சி நடக்கும் நாட்டில் மக்களின் நலன் மீது அக்கறை இல்லாமல் இருப்பதேன்
நாம் சற்றே விழிப்புணர்வோடு இருந்து கொள்ள வேண்டியது நம் கடமை பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்
இதுபோல் கடைகளில் கிடைக்கும் தேன் பாட்டில்களை வாங்காமல் முடிந்தளவு இயற்கை முறையில் கிடைக்கும் தேனை பயன்படுத்த முயற்சிசெய்வோம்

பாகற்காயை உணவில் அதிகம்




சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
என்ன வென்று பார்ப்போமா!!!
சுவாச கோளாறுகள்.
பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமா, இருமல், சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கு விரைவில் தீர்வு காணலாம்.
கல்லீரல் பிரச்சனைகள்.
தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்கி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
நோயெதிர்ப்பு சக்தி.
பாகற்காய் மட்டுமின்றி, அதன் இலைகளும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். அதிலும் அதன் இலைகளை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை தினமும் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பருக்கள்.
உங்களுக்கு பருக்கள், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை அதிகம் ஏற்பட்டால், பாகற்காயை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். இதனால் பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.
நீரிழிவு.
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சிறப்பான உணவுப்பொருள். ஏனெனில் பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மை இன்சுலின் போன்று செயல்பட்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
மலச்சிக்கல்.
மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், பாகற்காயை வாரத்திற்கு 2-3 முறை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும்.
ஆரோக்கியமான சிறுநீரகம்.
பாகற்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் சிறுநீரகத்தின் செயல்பாடும் ஆரோக்கியமாக இருக்கும்.
இதய நோய்.
பாகற்காய் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
புற்றுநோய்.
பாகற்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். ஆகவே அடிக்கடி பாகற்காயை உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
எடை குறைவு.
பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். மேலும் உடலின் மெட்டபாலிசம் மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்பாடு அதிகரித்து, உடல் எடையை விரைவில் குறைக்க உதவும். முக்கியமாக பாகற்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும் தண்ணீர் 80-85% சதவீதம் உள்ளதால், இதனை உட்கொண்டால், வயிறும் விரைவில் நிறைந்துவிடும்.
கட்டுரை – மகா.
அனுப்புனர் – மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார்

Quran


உங்கள் இறைவன் விரும்பினால், பூமியிலுள்ள அனைவருமே நம்பிக்கையாளர்களாகி விடுவார்கள். எனினும், மனிதர்கள் (அனைவருமே) நம்பிக்கையாளர்களாகிவிட வேண்டுமென்று அவர்களை நீங்கள் நிர்ப்பந்திக்க முடியுமா?
எந்த ஆத்மாவும் அல்லாஹ்வின் அருள் (நாட்டம்) இன்றி நம்பிக்கை கொள்ள முடியாது. ஆனால், அறிவில்லாதவர்(களாகிய விஷமி)கள் மீதே (அவர்களின் விஷமத்தின் காரணமாகப்) பாவத்தின் தண்டனையை ஆக்கி விடுகிறான்.
(நபியே! அவர்களை நோக்கி) "வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகளை (சிறிது) கவனித்துப் பாருங்கள்" எனக் கூறுங்கள். எனினும், நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு நம்முடைய வசனங்களும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் யாதொரு பயனுமளிக்காது.
(அல்குர்ஆன்: 10:99-101

என்னடா நாடு இது...?


என்னடா நாடு இது...?
மதுவினால் மரணத்தை நோக்கி செல்லும் மனித உயிர்களை மீட்க ஒருவர் 25-நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்,அவரை ஒரு ஆறுதலுக்கு கூட.சந்திக்க மனித நேயர்கள் இல்லையே. ?
பக்கத்து நாட்டில் ஒரு பிரச்சனையென்றால் வாய் கிழியே பதிவிட்டு தன் அரிப்பை தீர்த்துக்கொள்ளும்...நாம் ...?
தாய் நாட்டில் மது ஒழிக்க போராடும் இந்த பெரியவரை சந்திக்க நாதியில்லையே...?
ஏன்..? விளம்பரம் குறைவா..?
ஏன்..? மீடியா வரவு குறைவா..?
மதுவை விட கேடு...
மனசாட்சியில்லாதவனே... ஏய் விபச்சார ஊடகமே.....குடித்து விட்டு ஜல்சா பண்ணும் பிக்காளி படங்களை தலைப்பு செய்தியாய் போட்டு உன் வாயிற்றை நிரப்புகிறாயே....₹உனக்கு மது ஒழிப்புக்கு எதிராய் 25 .நாள் உண்ணாநிலை போராட்டத்தில் இருக்கும் இந்த வாயதானவர்களை கண்ணுக்கு தெரியவில்லையா.....இல்லை மது ஒழிந்து விட்டால் உனக்கு தலைப்பு செய்தி கிடைக்காது என்பதால் அவர்களை கண்டு கொள்ள வில்லையா???? த்திரிக்கையாளர்கள் ,தொலைக்காட்சி நிறுவனங்கள் யாருமே இவரை கண்டு கொள்ளவில்லையாம்.
இவர் கொல்லப்படும் முன்பு இவரது செயலை நாமாவது
உலகம் அறியச் செய்வோம்.
இந்த மகானைக் காப்பாற்ற தயவு செய்து பகிருங்கள் நண்பர்களே

Hadis


நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான், "யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக)'' என்று கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான், "என்னை என் தாய் இழக்கட்டும். நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டேன். மக்கள் தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்பதை நான் அறிந்து கொண்டு நான் அமைதியாகி விட்டேன்.
என் தாயும், தந்தையும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் (எனக்கு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ, பின்னரோ அவர்களை விட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை. அடிக்கவுமில்லை. திட்டவுமில்லை. அவர்கள், "இந்தத் தொழுகையானது மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும், பெருமைப்படுத்துவதும், குர்ஆன் ஓதுவதுமாகும்'' என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி)
நூல்: முஸ்லிம் 836

குளிர் காலங்களில் சளி

'பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி ஏற்பட்டு விடுகின்றது சிலருக்கு மருந்துகள் பாவிப்பதன் மூலமாகவும் குணமவடைவது இல்லை இந்த முறையை நீங்களும் ஒரு முறை செய்து தான் பாருங்கள்.
நீங்கள் இரவு உறங்க செல்லும் முன்னர் 
மூன்று எலுமிச்சை பழம் ( தேசிக்காய் ) எடுத்து அதை பாதியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதனில் தேவையான அளவு உப்பு இட்டு பின்னர் நன்கு கொதிக்க வையுங்கள்.
நீங்கள் கொதிக்க வைத்த இரண்டு கப் நீர் ஒரு கப் அளவு குறையும் வரை நன்கு வெந்து விடும் அளவுக்கு அப்பொழுது எலுமிச்சை பழம் ( தேசிக்காய் ) யை புளிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள் ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடிக்க வேண்டும் அப்படி குடித்து விட்டு தூங்குங்கள் உங்களுக்கு உறக்கம் சென்ற பாதி இரவில் உங்களுக்கு வியர்த்து வேர்வையாக வரும் உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறிவிடும். 
ஒரு முறை செய்து தான் பாருங்கள் உங்களுக்கு மருத்துவர்களிடம் செல்ல தேவையே இல்லை.
இந்த பதிவை படித்துவிட்டு நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் அவர்களும் பயன் பெறலாம்.'

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி ஏற்பட்டு விடுகின்றது சிலருக்கு மருந்துகள் பாவிப்பதன் மூலமாகவும் குணமவடைவது இல்லை இந்த முறையை நீங்களும் ஒரு முறை செய்து தான் பாருங்கள்.
நீங்கள் இரவு உறங்க செல்லும் முன்னர்
மூன்று எலுமிச்சை பழம் ( தேசிக்காய் ) எடுத்து அதை பாதியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதனில் தேவையான அளவு உப்பு இட்டு பின்னர் நன்கு கொதிக்க வையுங்கள்.
நீங்கள் கொதிக்க வைத்த இரண்டு கப் நீர் ஒரு கப் அளவு குறையும் வரை நன்கு வெந்து விடும் அளவுக்கு அப்பொழுது எலுமிச்சை பழம் ( தேசிக்காய் ) யை புளிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள் ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடிக்க வேண்டும் அப்படி குடித்து விட்டு தூங்குங்கள் உங்களுக்கு உறக்கம் சென்ற பாதி இரவில் உங்களுக்கு வியர்த்து வேர்வையாக வரும் உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறிவிடும்.
ஒரு முறை செய்து தான் பாருங்கள் உங்களுக்கு மருத்துவர்களிடம் செல்ல தேவையே இல்லை.
இந்த பதிவை படித்துவிட்டு நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் அவர்களும் பயன் பெறலாம்.

திங்கள், 23 பிப்ரவரி, 2015

பங்குவர்த்தகம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்


பங்குவர்த்தகம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் அதற்கு முன் சில அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள் 

ஒரு நிறுவனம் என்பது கீழ்கண்ட இரு வகைகளில் உருவாக்கப்படுகிறது,
  • தனியொருவர் மட்டும் முதல் போட்டு வியாபாரம் செய்தால் அது தனியார் வியாபாரம். (Private Business)
  • சில நபர்கள் கூட்டு சேர்ந்து முதல் போட்டு வியாபாரம் செய்தால்அது பங்கு நிறுவனம் எனப்படும். (ஆங்கிலத்தில் Partnership எனப்படும்)
மேலே கூறப்பட்ட Partnership என்பது முகம் தெரிந்தவர்களை மட்டும் சேர்த்து இயங்கக்கூடியது. இவற்றுடன் முகம் தெரியாத பலரையும் சேர்த்து வியாபாரம் செய்வதற்காக உருவாக்கப்படுவதற்கு கம்பனி என்று பொருள்.
இந்த கம்பனிகள் ரெஜிஸ்டார் ஆப் கம்பனீஸ் (Registrar of Companies) என்னுமிடத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதனால் அந்த கம்பனியின் கடன்களுக்கு அக்கம்பனியே பொறுப்புபங்குதார்கள் பொறுப்பல்ல. (பங்குதாரகள் என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது)
மேலே கூறப்பட்ட கம்பனிகள்முகம் தெரியாத பலரை சேர்க்க வெளியிடப்படும் சேர்களுக்கு (shares) பங்கு என்று பொருள்.
பொதுவாக பங்குகளை வாங்கி விற்குமிடமே (டிரேடிங்) பங்குச்சந்தை ஆகும். இங்கு சிறு முதலீட்டாளர்கள்தரகர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள்தரகர்கள் வரை பங்குபெறலாம்.
உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (National Stock Exchange) ஆகும். உலகளவில் நியூயார்க் பங்குச்சந்தை (New York Stock Exchange)லண்டன் பங்குச்சந்தை (London Stock Exchange)நாஸ்டாக் (NASDAQ) மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் (Hong Kong Stock Exchange) புகழ் பெற்றவைகள்.
· முதன்மை பங்குச்சந்தை (Primary Market)
ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு வெளியிடுமிடம்(Issuing first stocks to public) முதன்மை பங்குச்சந்தை ஆகும். இதற்கு ஐ.பி.ஓ (IPO – Initial Public Offer) என்று பொருள்.
· இரண்டாம் நிலை பங்குச்சந்தை  வெளிச்சந்தை (Secondary Market)
முதன்மை பங்குச்சந்தையில் வாங்கப்பட்ட பங்குகளை விற்பதற்கோ அல்லது வாங்குவதற்கோ வெளிச்சந்தையை அனுக வேண்டும். ஒரு கம்பனி ஐ.பி.ஓ (IPO) முடிந்த பிறகு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் (Will be listed in stock market). அதன் பிறகு அக்கம்பனியின் பங்குகளை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் விற்க முடியும். இப்பங்கின் நடப்பு விலையை (Current stock value) பொறுத்து மற்றொரு முதலீட்டாளர் வாங்கிக்கொள்ளலாம்.
பங்குதாரர்களை சேர்க்க கம்பனிகள் பங்குகள் எனப்படும் சேர்களை வெளியிடுவார்கள். இவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு குறிப்பிட்ட முகப்பு விலையை (Face Value) நிர்னயம் செய்வார்கள். இப்பங்கை முகப்பு விலையோ அல்லது அதற்கு மேலோ விலை கொடுத்து வாங்குபவர்கள் பங்குதாரர்கள் ஆவார்.
பங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குத்தரகர்கள் ஆவர். இவர்கள் மட்டுமே,பங்குகளை வாங்க/விற்க (Buy/Sell) நினைக்கும் தனிநபர் அல்லது நிறுவனம் சார்பாக டிரேடிங் (Trading) செய்ய முடியும். இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் பங்குதரகரிடம் ஒரு கணக்கை தொடங்க வேண்டும்.