செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

பாகற்காயை உணவில் அதிகம்




சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
என்ன வென்று பார்ப்போமா!!!
சுவாச கோளாறுகள்.
பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமா, இருமல், சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கு விரைவில் தீர்வு காணலாம்.
கல்லீரல் பிரச்சனைகள்.
தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்கி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
நோயெதிர்ப்பு சக்தி.
பாகற்காய் மட்டுமின்றி, அதன் இலைகளும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். அதிலும் அதன் இலைகளை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை தினமும் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பருக்கள்.
உங்களுக்கு பருக்கள், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை அதிகம் ஏற்பட்டால், பாகற்காயை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். இதனால் பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.
நீரிழிவு.
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சிறப்பான உணவுப்பொருள். ஏனெனில் பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மை இன்சுலின் போன்று செயல்பட்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
மலச்சிக்கல்.
மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், பாகற்காயை வாரத்திற்கு 2-3 முறை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும்.
ஆரோக்கியமான சிறுநீரகம்.
பாகற்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் சிறுநீரகத்தின் செயல்பாடும் ஆரோக்கியமாக இருக்கும்.
இதய நோய்.
பாகற்காய் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
புற்றுநோய்.
பாகற்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். ஆகவே அடிக்கடி பாகற்காயை உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
எடை குறைவு.
பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். மேலும் உடலின் மெட்டபாலிசம் மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்பாடு அதிகரித்து, உடல் எடையை விரைவில் குறைக்க உதவும். முக்கியமாக பாகற்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும் தண்ணீர் 80-85% சதவீதம் உள்ளதால், இதனை உட்கொண்டால், வயிறும் விரைவில் நிறைந்துவிடும்.
கட்டுரை – மகா.
அனுப்புனர் – மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார்

Related Posts:

  • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பயணம் மோடியும் ரயில் பயணம் செய்தார், மூன்று பேர் பயணம் செய்வதற்கு ஒரு பெட்டி முழுவதையும் ஆக்கிரமித்து அதில் பொது மக்கள் ஏறாத வண்ணம் பாதுகாப்பு அதிகாரிகளா… Read More
  • சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ரமலான் நோன்பு கலிஃபோர்னியா ஆராய்ச்சியாளர்களின் முடிவில் நோன்பு நோற்பதால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதாகவும் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுவதாகவும்&nb… Read More
  • பாம்பு என்றால் விஷம் – யார் இந்த rangaraj pandey... ஓர் அலசல்!‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம்’ என்பது தமிழர் பழமொழி. அப்படி ஒண்ட வந்த பிடாரி – ரங்கராஜ் பாண்டே… Read More
  • பிராய்லர் சிக்கன் ஏற்படுத்தும் சிக்கல் பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு க… Read More
  • Power of Learning நான் எத்தனையோ பேச்சை கேட்டு இருக்கிறேன்.....கேட்டுக்கொண்டே இருக்கலாம்.... எவ்வளவு அழகான பேச்சு!! வார்த்தைகள் ஒவ்வொன்றும் கணீர் என்று...நன்றி : Abdul … Read More