திருச்சி அருகில் உள்ள ஒரு ஊரிலும்,மற்றும் லால்பேட்டை: எள்ளேரியில் இஜ்திமா மாநாடு !
தப்லீக் ஜமாஅத்தின் இஜ்திமா அங்கே நடப்பது என்ன?
முதல்நாள் அமர்வு. மார்க்க பயான். பிறகு தொழுகை பற்றின பயான். இது முடிந்ததும் மறுபடியும் பயான் பிறகு உறக்கம்.. அதன் பிறகு தொழுகை, அப்புறம் பயான். உணவு இப்படியே 3 நாள் பிறகு அனைவரும் கூடி கலைந்தார்கள்.
மக்கள் தங்களுடைய வேலை மற்றும் இதர தேவைகளை எல்லாம் ஒதிக்கி வைத்துவிட்டு இந்த இஜ்திமாவில் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்ட எனது மைத்துனர் சொன்னது.
அப்படியே உங்களுக்கு. நான் மேல சொன்னது போல பயான், தொழுகை, உணவு, இது தான் நடந்தது. நான் அவரிடம் கேட்டது. இஜிதிமாவில் நீங்கள் கற்று கொண்டது என்ன?
அவர் மாஷா அல்லாஹ் எவ்வளவு மக்கள் அப்போ பெரிய பெரிய மனிதர்கள்எல்லாம் வந்து இருக்கார்கள் (வெள்ளை ஜிப்ப தொப்பி) நமக்கு அருமையா பயன் அல்குரான் பற்றி பேசுவார்கள், நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் வாழ்க்கை பற்றி பேசுவார்கள், இஸ்லாமிய வரலாறு பற்றி பேசுவார்கள், இன்றைய நாட்டு நடப்பை பற்றி பேசுவார்கள்.என்று ஆவலுடன் இருந்தேன் என்று சொன்னார்.
நான் அப்ப இதை எல்லாம் அவர்கள் பேசவில்லையா?
அங்கே கூடி இருந்த மக்கள் எதை கேட்டார்கள் நீங்கள் என்ன விளங்கிநீர்கள்.
அங்கே கூடி இருந்த மக்கள் எதை கேட்டார்கள் நீங்கள் என்ன விளங்கிநீர்கள்.
அவரின் அதங்கம் அங்கே நடந்ததில் சிறந்தது தொழுகை (இதை தான் நாம் தினமும் செய்கிறோமே) மட்டும் தான் இதற்காகவா 3 நாள் செலவு செய்தேன்.
அல்குரனை பெயரளவில் ஓதிவிட்டு தப்லிக் தாலீம் புத்தகத்தில் உள்ள சிறு பெரு கதைகளை சொன்னார்கள்.(இது போன்ற கதை தான் எங்கள் பாட்டி நான் சிறு பிள்ளையாக இருக்கும் போதே சொல்லி விட்டார்களே) இதை கேட்க இந்த 3 நாள் சிலவு செய்தேன்.
அல்குரனை பெயரளவில் ஓதிவிட்டு தப்லிக் தாலீம் புத்தகத்தில் உள்ள சிறு பெரு கதைகளை சொன்னார்கள்.(இது போன்ற கதை தான் எங்கள் பாட்டி நான் சிறு பிள்ளையாக இருக்கும் போதே சொல்லி விட்டார்களே) இதை கேட்க இந்த 3 நாள் சிலவு செய்தேன்.
ஆர்பரித்த மக்கள் வெள்ளம் இந்த மக்களுக்கு சொள்ள எத்தனையோ நல்ல விசயங்களை அதாவது இன்று இந்தியாவில் சங்க பரிவார அமைப்புகள் இஸ்லாத்திற்கும் இஸ்லாமியரையும் அளித்திட நினைக்கும் இந்த கும்பலை பற்றி சிறு தெளிவை மக்களுக்கு சொல்லி உணர்த்தி இருக்கலாம் சொல்லாமல் இப்படி வினாடித்து விட்டார்களே என்று அழுகத குறையாக சொன்னார்.
அங்கே குடி இருந்தவர்களின் நிலை என்ன என்று கேட்டேன்.
இவர்களின்(தப்லிக்) நிலவரம் தெரிய ஆரம்பிக்கவும் மக்கள் சிறு சிறு குழுக்களாக வெளியே செல்ல ஆரம்பித்து விட்டார்கள் அங்குள்ள கடைகளில் சுற்றவும் அவரவர் சொந்த விபரங்களையும் பேசியும் (தொழுகை நேரத்தில் மட்டும் கூடாரத்தில் இருந்தார்கள்) அரட்டை அடித்து 3 நாள் பொழுதை கழித்தார்கள் நாம் ஏன் இங்கு வந்தோம் வந்ததில் என்ன கற்று கொண்டும் என்று விளங்காமலே கூடி களைந்தோம்.
இது தான் இஜ்திமா என்று தெரிந்து இருந்தால் போயே இருக்க மாட்டேன். தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நடத்தும் 2 மணி நேர நிகழ்ச்சியில் எத்தனையோ உலக விஷயம்,மார்க்க விஷயங்களை கற்று உள்ளேன் 3 நாள் கூடிய இந்த மாநாட்டில்
ஒன்றுமே சொல்லாமல் இந்த தப்லிக்காரர்கள் வினாடித்து விட்டார்களே என்ற ஆதங்கத்தோடு இப்பவரை இருக்கார்.
ஒன்றுமே சொல்லாமல் இந்த தப்லிக்காரர்கள் வினாடித்து விட்டார்களே என்ற ஆதங்கத்தோடு இப்பவரை இருக்கார்.
இதற்க்கு பெயர் இஜ்திமா? இது தான் இஸ்லாம் சொல்லி கொடுத்த வழி முறையா?
அல்லாஹ்வும்,நபிகள் நாயகம் (ஸல்) சொன்னைதை கேளுங்கள்.
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.
(அல்குர்ஆன் 16:125).
(அல்குர்ஆன் 16:125).
அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுப்பதா?
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்பட வேண்டியதே!
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரீ (2697)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரீ (2697)
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: முஸ்லிம் (3243)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: முஸ்லிம் (3243)
இவையெல்லாம் நல்ல செயல் தானே ஏன் செய்யக் கூடாது? என்று கேட்பவர்களிடம் அல்லாஹ் ஒரு கேள்வியைக் கேட்கின்றான்
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா?
(திருக்குர்ஆன் 49:16)
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா?
(திருக்குர்ஆன் 49:16)
அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்குச் சமமாக ஆகிவிடும்.