சனி, 14 பிப்ரவரி, 2015

மேலப்பாளையம் சிறுமி சமீரா வின் நேரடி வாக்கு மூலம்!


மேலப்பாளையம் மாணவி கடத்தல் : சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - SDPI வலியுறுத்தல்....!!
மேலப்பாளையம் ஹாமீம்புரத்தைச் சேர்ந்தவர் ஹனிஃபா. இவர் ஒரு வழக்கில் திருச்சி சிறையில் உள்ளார். இவரது 9 வயது மகள் 4வது படிக்கும் பள்ளி மாணவி சமீரா. இவர் கடந்த பிப்ரவரி 8ந் தேதி அன்று மாலை கடைவீதிக்கு சென்றுள்ளார்.
அப்போது SIU ஐச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் மனோகரன் மற்றும் உளவுத்துறை காவலர் ஒருவரும் சேர்ந்து பள்ளி மாணவி சமீராவை பைக்கில் வாயை பொத்தி கடத்திச் சென்றுள்ளனர்.
மேலும் பள்ளி மாணவியிடம் சில கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு பதில் ஏதும் சொல்லாத மாணவியை கை, கால் மற்றும் முதுகில் தாக்கியுள்ளனர். இதனால் மாணவி பயத்தில் அழுத வண்ணம் இருந்துள்ளார். இந்நிலையில் மகளை காணாத அவரது தாயார் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். பின்னர் இரவு 8.30 மணியளவில் அருகிலுள்ள பள்ளிவாசலில் அறிவித்துள்ளனர்.
இதன் பிறகு சுமார் இரவு 10 மணியளவில் மாணவியின் தாயாரிடம் செல்போனில் பேசிய SIU சார்பு ஆய்வாளர் மனோகரன் மற்றும் இன்னொரு உளவுத்துறை காவலர் ஆகியோர் பள்ளி மாணவியை வீட்டில் இருசக்கர வாகனத்தில் கொண்டு இறக்கி விட்டுள்ளனர்.
அப்போது மாணவியின் கை, கால், முதுகில் காயங்களுடன் வலியால் துடித்துள்ளார். பின்னர் மேற்கண்ட இரு காவலர்கள் மீதும் மாணவியின் தாயார் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தற்போது மாணவி பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட இரு காவல்துறையினர் மீதும் 323, 342, 363, 506/2 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேற்கண்ட வழக்கு பல்வேறு சந்தேகங்களை நமக்கு ஏற்படுத்துகிறது. சிறுமியை எந்த நோக்கத்திற்காக காவல்துறையினர் கடத்தி சென்றுள்ளனர் என்பது புரியவில்லை.
அருகிலுள்ள பள்ளிவாசலில் மைக்கில் அறிவித்து பின்னர்தான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மேற்கண்ட காவல்துறையினர் மீண்டும் வீட்டில் கொண்டு விட்டனர்.
இதன் உண்மையை காவல்துறை அறிவிக்க வேண்டும். எனவே தமிழக அரசு உடனடியாக மேற்கண்ட காவல்துறையினர் மீது கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
மேற்கண்ட வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும், மாணவிக்கு தமிழக அரசு உடனடியாக தகுந்த நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
மேற்கண்டவாறு கூறினார்.
தகவல் உதவி : நெல்லை முஹம்மது லெப்பை




மேலப்பாளையம் சிறுமி சமீரா வின் நேரடி வாக்கு மூலம்!அதிகம் பரப்புங்கள்..
அயோக்கிய பரதேசி உளவுத்துறை செய்த கொடுமையைக் கேளுங்கள்..
கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி குழந்தையை அடித்து சித்ரவதை செய்த அயோக்கியர்களை கைது செய்து அவன் பதவியைப் பறித்து தண்டனை வாங்கிக் கொடுக்க சமுதாயமே அணி திரள்வீர்!
இனியும் நாம் உறங்கினால் நாளை நம் வீட்டிலும் வந்து கை வைப்பான்..சமுதாயமே விழித்துக் கொள்..பாதிக்கப்பட்டவள் என் சகோதரி என எண்ணிக் கொள்!..
இனி இப்படி ஒரு சம்பவம் இந்தியாவில் எங்கேயும் நடக்க கூடாது..
அவனுக்கு அந்த மாதிரி பதிலடி கொடுக்க வேண்டும்..