ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

சிம் கார்டு -STC,ZAIN,MOBILY


தாய் நாடு திரும்பும் சவூதியில் பணியாற்றும் சகோதரர்களுக்கு ஒரு எச்சரிக்கை ...!
சவூதியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் எனதருமை தமிழ் சொந்தங்களே,சமீப காலமாக நமது சகோதரர்களில் சிலர் விடுமுறையில் தாயகம் செல்வதற்காக விமான நிலையம் சென்ற போது எதிர்பாரா விதமாக அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.தாயகமும் செல்ல முடியாமல் விமான நிலையத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை தாங்கிக்கொள்ளவும் முடியாமல் விக்கித்து நின்ற அவர்களின் பரிதாபநிலை கண்டு என்னால் கண்ணீர் சிந்த மட்டுமே முடிந்தது.
.விசயத்திற்கு வருகிறேன்,நாம் நமது அத்தியாவசிய பயன்பாட்டிற்காகநமது இக்காமாவில்
( STC,ZAIN,MOBILY)போன்ற கம்பெனிகளில் சிம் கார்டு பெற்று அதை முறையாக பயன்படுத்தி வருகிறோம்.நம்மில் சிலர் ஒன்று அல்லது இரண்டு சிம் கார்டுகள் வைத்திருப்பது இயல்பு.இப்போது பிரச்சினை என்னவென்றால் நமக்கே தெரியாமல் நம்முடைய இகாமாவில் வேறு யார்,யாரோ சிம் கார்டுகளும்,நெட்கார்டுகளும் பெற்று பயன்படுத்திவருவதால் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு நாம்பலியாகி விடுகிறோம்.
இப்படி ஒருவர் இகாமாவில் வேறொருவர்நெட்சிம்கார்டு வாங்கி தாறுமாறாக பயன்படுத்தி ஆயிரக்கணக்கான சவூதி ரியால்களுக்கு பில் பாக்கி வைத்து விட்டதால்,யாருடைய பெயரில் சிம்பெறப்பட்டதோஅவர் ஏர்போர்ட்டை விட்டு வெளியேற முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டு விடுகின்றனர்.அப்படி திருப்பி அனுப்பப்பட்டவர்கள் .நிலுவைத்தொகை முழுவதையும் திருப்பி செலுத்தாத வரை இந்த நபர் சவூதியை விட்டு வெளியேற முடியாது.இந்த தவறுகள் எப்படி நடக்கிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.தற்போது ஒருவர் இகாமாவில் அவருக்கே தெரியாமல் 9 சிம்கார்டுகளும்,5 நெட்சிம்கார்டுகளும் STC மூலம் பெறப்பட்டு யார் யாரோ பயன் படுத்தி வருவதை கண்டு நொந்து போய் விட்டேன்.உடனடியாக STC தலைமை அலுவலகம் சென்றுபுகார் செய்து விட்டார் .அவர்களும் அவரது புகாரை பதிவு செய்து விட்டு 24 மணி நேரத்தில் இல்லீகலாக செயல்படும் சிம்கார்டுகளின்சேவை நிறுத்தம் செய்யப்பட்டு விடும் என சொல்லி 5 நாட்களாகி விட்டன.ஆனாலும் இதுவரை நடவடிக்கை இல்லை.வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பதை போல் இப்படி ஒரு சம்பவம் .இது போல எத்தனையோ நபர்கள் பாதிக்கப்பட்டு சிம்கார்டு அலுவலகங்களுக்குஅலைந்து கொண்டிருப்பதை காண முடிகிறது.விஷயம் தெரிந்தவர்கள் சுதாரித்துக் கொள்கின்றனர் விஷயம் தெரியாதவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்
.நமது இகாமாவில் எத்தனை சிம்கார்டு பயன்பாட்டில் உள்ளது என்பதை எப்படிதெரிந்து கொள்வது?STC சிம்கார்டு வைத்திருப்பவர்கள் 902 என்ற எண்ணிற்கு 9988 என்ற எண்களை டைப் செய்து மெசேஜ் செய்தால் உடனே நமது இகாமாவில் எத்தனை சிம்கார்டுகள் உள்ளது என்ற விபரம் வந்து விடும்.STC சிம்கார்டு வைத்திருக்கும் சகோதரர்கள் உடனே உங்களது இகாமாவின்நிலைபாட்டை தெரிந்து கொள்ள முயற்சிக்கவும்.ஏதேனும் பிரச்சினை இருந்தால் சம்பந்தப்பட்ட சிம்கார்டு தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு உங்களதுபிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் இது காலத்தின் மிக மிக அவசர அவசியமாகும்.
Thanks to Information today!