கையில் நச்சென்று ஆணியடித்தது போல ஒரு தகவல் சொல்கிறேன் கேளுங்கள்.
1100 வருடங்கள் பழமையான புத்தர் சிலையொன்றைப் பரிசோதனைக்காக ஹாலந்து நாட்டுக்கு கொடுத்திருந்தது சீனா. கிட்டத்தட்ட கௌதம புத்தர் அமர்ந்திருக்கும் நிலையில் அந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிலையைப் பெற்றுக்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அதை CT Scan செய்து பார்த்தபோது, திகைத்துப் போய்விட்டனர். காரணம் அந்தச் சிலைக்குள், ஒரு மனிதன் தவம் செய்த நிலையில் மம்மியாக (Mummy) அடக்கம் செய்யப்பட்டிருந்தார்.
சிடி ஸ்கானர் மூலம் பார்த்தபோது, ஒரு புத்தத் துறவி, தியானம் செய்யும் நிலையில் உடல் உள்ளுறுப்புகள் அகற்றி, மம்மியாக்கப்பட்டுப் பின்னர் சிலையாக வடிவமைக்கபட்டது தெரிய வந்துள்ளது. 11ம் நூற்றாண்டளவில் வாழ்ந்து வந்த பௌத்த துறவியும், குருவுமான 'லீக்குவான்’ (Master Liuquan) என்பவரே இப்படி அடக்கம் செய்யப்பட்டவர் என்கிறார்கள்.
-ராஜ்சிவா-