செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

Quran


உங்கள் இறைவன் விரும்பினால், பூமியிலுள்ள அனைவருமே நம்பிக்கையாளர்களாகி விடுவார்கள். எனினும், மனிதர்கள் (அனைவருமே) நம்பிக்கையாளர்களாகிவிட வேண்டுமென்று அவர்களை நீங்கள் நிர்ப்பந்திக்க முடியுமா?
எந்த ஆத்மாவும் அல்லாஹ்வின் அருள் (நாட்டம்) இன்றி நம்பிக்கை கொள்ள முடியாது. ஆனால், அறிவில்லாதவர்(களாகிய விஷமி)கள் மீதே (அவர்களின் விஷமத்தின் காரணமாகப்) பாவத்தின் தண்டனையை ஆக்கி விடுகிறான்.
(நபியே! அவர்களை நோக்கி) "வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகளை (சிறிது) கவனித்துப் பாருங்கள்" எனக் கூறுங்கள். எனினும், நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு நம்முடைய வசனங்களும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் யாதொரு பயனுமளிக்காது.
(அல்குர்ஆன்: 10:99-101

Related Posts: