புதன், 18 பிப்ரவரி, 2015

Hadis


எண்ணத்திற்கேற்பவே இறுதி நாளில் கூலி
"ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே?'' என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 2118

************

"நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தகுந்த காரணமின்றி தன் கணவனிட மிருந்து தலாக் கோறும் பெண்ணுக்கு சுவனத்தின் வாடை ஹராம் ஆக்கப்படும். அறிவிப்பவர் : சௌபான்(ரலி) நூல் : அஹ்மது"
தனக்கு பிடிக்காத ஒருவரை வீட்டுக்கு அனுமதிக்க வேண்டாம் என்று மனைவிக்கு உத்தரவிட்ட கணவனுக்கு எதிராக விவாகரத்து கோறச் சொல்லும் மாமியார்களும் அதற்கு இணங்குகின்ற மனைவிமார்களும், உடந்தையான குடும்பங்களும் நம் சமூகத்தில் இல்லாமலில்லை.
இப்படியானவர்களுக்கு பின் வரும் நபி மொழி உதாரணமாகும்....
'உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.''
(ஜாமிவுத் திர்மிதி)
அதிகமாக பகிர்ந்துகொள்ளுங்கள்
நண்பர்களுக்கும் தெரியப்படுத்த