/indian-express-tamil/media/media_files/2025/03/08/4h3u63TC1MqordQa23iT.jpg)
அமித்ஷா புகைப்படத்திற்கு பதிலாக சந்தான பாரதி புகைப்படம் இடம்பெற்ற போஸ்டர்
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் மார்ச் 7 நடைபெற்ற ராஜாதித்ய சோழா ஆட்சேர்ப்பு பயிற்சி மையத்தில் சிஐஎஸ்எஃப் தினத்தில் பங்கேற்ற அமித் ஷாவை வரவேற்க தமிழ் நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதியின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அமித்ஷா புகைப்படத்திற்கு பதிலாக சந்தான பாரதியின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. மேலும் இதுகுறித்து தி இந்து வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
அந்த போஸ்டர்களில் திரு.பாரதியின் படங்கள் இடம்பெற்றிருந்தன, "இந்தியாவின் இரும்பு மனிதர்! வாழும் வரலாறு! வருக!" என்றும் வசனங்கள் இடம்பெற்று இருந்தது. அந்த போஸ்டர்களில் பா.ஜ.க.வின் மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழியின் பெயர் இருந்தது.
ஆனால், அந்த போஸ்டர்களை தான் ஒட்டவில்லை என்றும், மத்திய அரசின் சின்னம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்து இருந்தார். ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளருக்கும் அவர் நடவடிக்கை கோரி கடிதம் எழுதினார். பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையும் இந்த சுவரொட்டியை கட்சி ஒட்டவில்லை என்று மறுத்தார், மேலும் இது விஷமிகளின் கைவேலை என்று சந்தேகித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அமித்ஷா தமிழ்நாட்டில் அறிமுகமான நபராக இல்லாதபோது, சந்தான பாரதியின் புகைப்படம் இதேபோல ஒருமுறை அச்சிடப்பட்டு பாஜக நிர்வாகியால் போஸ்டர் ஒட்டப்பட்டது. இது குறித்து நடிகர் ஒரு பேட்டியில் கிண்டல் செய்தும் பேசியிருந்தார்.
7 3 25
source https://tamil.indianexpress.com/tamilnadu/ranipet-santhana-baharathi-photo-instead-of-amit-shah-photo-in-poster-8832656