8 3 25
/indian-express-tamil/media/media_files/2025/03/08/0ns6x8HHaBsk53U9dE6q.jpg)
அதிக வரி வசூலிப்பது பற்றி அம்பலப்படுத்தியதால் தான் இந்தியா "தங்கள் வரிகளை வெகுவாகக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது" என்று என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வெள்ளிக்கிழமை, இந்தியா "தங்கள் வரிகளை வெகுவாகக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது" என்று கூறினார். இது தொடர்பாக வாஷிங்டன், டி.சி-யில் உள்ள ஓவல் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், "இந்தியா நம்மிடம் மிகப்பெரிய அளவில் வரி வசூலிக்கிறது. இந்தியாவில் நம்மால் எதையும் விற்கக்கூட முடியாத அளவுக்கு மிக அதிகமான வரிகளை வசூலிக்கிறது. ஆனால், அவர்களின் அதிக வரி குறித்து யாரோ ஒருவர் (டிரம்ப்) அம்பலப்படுத்தியதால் ஒருவழியாக அதனைக் குறைக்க தற்போது ஒப்புக்கொண்டுள்ளனர்." என்று அவர் விமர்சித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, இரு தரப்பினரும் பரஸ்பர நன்மை பயக்கும், பல துறை இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) பேச்சுவார்த்தை நடத்தும் திட்டங்களை அறிவித்தனர். இது தொடர்பாக இன்று இந்தியாவின் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்காவின் தொழில்துறை செயலாளர் ஹோவர்ட் லூட்னிக் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் டொனால்ட் டிரம்ப் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பால் பொருள்கள், மரக்கட்டைகள் இறக்குமதிக்கு கனடா அதிக வரி விதிப்பது குறித்துப் பேசிய டிரம்ப், 'கனடா மீதும் அதே அளவில் வரி விதிப்போம்' என்று தெரிவித்தார். "கனடா, மெக்ஸிகோ, இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் அமெரிக்காவிடம் இருந்து அனைத்தையும் பறித்துக் கொள்கிறார்கள். கனடா வரிகளைக் குறைக்காவிட்டால் அவர்கள் குறைக்கும் வரை நாங்கள் அதே அளவிலான வரிகளை விதிக்கவுள்ளோம். வருகிற திங்கள் அல்லது செவ்வாய் (மார்ச். 10, 11) வரை காத்திருப்போம்” என டிரம்ப் கூறினார்.
கனடா, மெக்ஸிகோவின் கணிசமான பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரிவிதிப்பை டிரம்ப் தற்போது தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. மேலும், டிரம்ப் தனது சமீபத்திய அறிக்கையில், அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரிகளை வசூலிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம், சீனா மற்றும் கனடாவுடன் இந்தியாவையும் சேர்த்துக் குறிப்பிட்டு இருந்தார்.
source https://tamil.indianexpress.com/india/india-cut-tariffs-down-donald-trump-tamil-news-8833349