கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் 13 10 2025
Soruce FB page Vasu Sumathi
JK மகேஷ்வரி மற்றும் NV அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
தவெக கட்சி சார்பாக வழக்கறிஞர்கள் திரு.கோபால் பாலசுப்பிரமணியம், மற்றும் ஆர்யமா சுந்தரம், பாதிக்கபட்டவர் சார்பாக திரு. ராகவாச்சாரி, தமிழ்நாடு அரசு சார்பாக ஹரிஷ் ரோத்தகி, P வில்சன் மற்றும் அபிஷேக் சிங்கிவி ஆஜராகினர்.
பாஜகவின் ஜி.எஸ்.மணி சார்பில் மற்றொரு வழக்கறிஞர் ஆஜரானார். ஆனால் நீதிமன்றம் அந்த மனு முறையாக தாக்கல் செய்யப்படவில்லை என்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் சென்று எப்படி ஆதாரம் இல்லாது இதுபோன்ற சில குற்றச்சாற்றுகளை வைக்கிறார்ககள் என்று எனக்கு தலையே சுற்றியது...
1. நான்கு மணி நேரத்திற்குள் உடர்கூராய்வுகளை முடித்து விட்டு அதிகாலை 4 மணிக்கே பிரேதங்கள் ஏரிக்கப்பட்டதாம்...நடைமுறை விதிமுறைகள் பின்பற்றப்படவில்லையாம்
2. பதிவு எண் இல்லாத ஆம்புலன்ஸ் சம்பவ இடத்தில் காணப்பட்டதாம்.
3. செந்தில் பாலாஜியின் உருவப் படம் பதிக்கப்பட்ட WaterBottles திட்டமிட்ட முறையில் விநியோகிக்கப்பட்டதாம்.
4.விஜய் பிரச்சாரத்திற்கு வந்ததே 7 மணிக்குதானாம். ஆனால் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய தொடர்புள்ளவர்கள் ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என்று x தளத்தில் பதிவிட்டார்களாம்.
5. கூட்ட நெரிசல் ஆரம்பித்ததற்கு காரணம் யாரோ காலணிகளை தூக்கி எறிந்ததுதானாம். அதற்கு பிறகு போலீஸ் தடியடி நடத்தியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கித்தான் மக்கள் உயிரிழந்தனர் என்று மனசாட்சியே இல்லாமல் சொல்லுகிறார்கள
6. ஏன் அவ்வளவு அவசர அவசரமாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைதித்தீர்கள்..
7. ஒரே நேரத்தில் மதுரை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் போது, சென்னை உயர்நீதிமன்றம் வேறொரு வழக்கில் (sop) இந்த சம்பவத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது ஏன்?
இரண்டு பக்கங்களின் வாதங்களையும் கேட்டுவிட்டு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. அந்த பதிலை பொறுத்துதான் சிபிஐக்கு மாற்றக் கோரிய இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும். (உத்தேசமாக நவம்பர் 14 ஆம் தேதி - அதற்கு முன்னும் வரலாம்). அதுவரை உச்சநீதிமன்றம் மறுதேதி அறிவிக்காமல் வழக்கை ஒத்திவைத்தது .





