புதன், 15 நவம்பர், 2023

வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி! – தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி! – தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி,  நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், 16ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.  

அதன் காரணமாக, அடுத்த மூன்று மணி நேரத்தில் கடலூர்,  மயிலாடுதுறை,  நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் காரைக்கால் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர்,  செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் ஆகிய  5 மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


source https://news7tamil.live/atmospheric-mantle-circulation-formed-in-the-bay-of-bengal-chance-of-heavy-rain-in-9-districts-of-tamil-nadu.html