செவ்வாய், 28 நவம்பர், 2023

மாவட்ட ஆட்சியர்களுக்கு இ.டி. சம்மன்: மத்திய அரசு ஆளும் மாநிலங்களில் ஏன் நடவடிக்கை இல்லை? மூத்த வழக்குரைஞர் வாதம்

 

Madras HC new II

இந்த வழக்கில் நவம்பர் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

madras-high-court | சட்டவிரோத மணல் அகழ்வில் தொடர்புடையதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில், மாநிலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்க இயக்குநரகம் (ED) சம்மன் அனுப்பியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறையின் (ED) விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், மத்திய நிறுவனம் தனது சம்மன் மூலம் விசாரணை நடத்த முயல்கிறது என்றும் தமிழக அரசு திங்கள்கிழமை (நவ.27) வாதிட்டது.

திமுக தலைமையிலான மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, பாரதிய ஜனதா (பாஜக) ஆளும் மாநிலங்களில் அதிக அளவில் சட்டவிரோத சுரங்க வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் இ.டி., ஏன் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இது குறித்து, துவே, “அவர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள் என்றால், நூற்றுக்கணக்கான சட்டவிரோத சுரங்க வழக்குகள் உள்ள உ.பி., மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என வினாயெழுப்பினார்.

மேலும், மற்ற மாநிலங்களிலும் அமலாக்கத்துறை இதேபோன்ற நடவடிக்கை எடுத்தால், தமிழக அரசு தனது மனுக்களை வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.

நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தபோது, இடைக்கால நிவாரணம் குறித்த கேள்விக்கு நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கும் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில், இ.டி. தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன் ஆஜராகி, மாநில அரசின் மனுவை எதிர்த்தார்.

இந்த வாதத்தை வழக்குரைஞர் துவே கடுமையாக எதிர்த்தார். அவர் மாநில அரசு யாரையும் பாதுகாக்கவில்லை என்று பதிலளித்தார். இந்த வழக்கில் நவம்பர் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/senior-advocate-dushyant-dave-argued-in-the-madras-high-court-why-there-is-no-action-in-bjp-ruled-states-1711094