வெள்ளி, 24 நவம்பர், 2023

காலவரையின்றி ஆளுநர் மசோதாக்களை நிலுவையில் வைக்க முடியாது: உச்சநீதிமன்றம்

 saaga

காலவரையின்றி ஆளுநர் மசோதாக்களை நிலுவையில் வகைக்ககூடாது என்று உச்சநீமன்றம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தினார்.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு  வழக்கு தொடர்ந்திருந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்  தலைமையிலான  அமர்வு, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

இதில் “ அரசியல் சாசனத்தின் 200 வது பிரிவின் மீதான ஒப்புதலை ஆளுநர் நிறுத்தி வைக்க முடிவு செய்தால், அதனை மறுபரிசீலனை  செய்ய சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீதான நடவடிக்கையாக ஆளுநருக்கு மூன்று செயல்முறைகள் உள்ளன. அதன்படி மசோதாக்களுக்கு  ஒப்புதல்  வழங்காமல் அல்லது ஜனாதிபதியின் பரிசீலனைக்காக மசோதாவை அனுப்பலாம் அல்லது மறுபரிசீலனை தேவைப்படும் அம்சங்களின் செய்தியுடன் கூடிய  ஒரு மசோதாவை ஆளுநர் சட்டசபைக்கு திருப்பி அனுப்பலாம்.

திருத்தங்களுடனோ அல்லது இல்லாமலோ மசோதாவை மீண்டும் சட்டசபை நிறைவேற்றினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆளுநர் மாநிலத்தின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் என்பதால், அவரது அரசியலமைப்பு  அதிகாரங்களைப் பயன்படுத்தி மாநில அரசுகளால் சட்டம் இயற்றும் வழக்கமான போக்கை கட்டுப்படுத்த முடியாது.

அடையாள பதவியில் இருக்கும் ஆளுநருக்கு தனியாக எந்த அதிகாரமும் இல்லை, அரசும் அதன் அமைச்சர்களும் சொல்வதுபடி ஆளுநர் நடந்துகொள்ள வேண்டும். ஆளுநர் இதுபோல செயல்படவில்லை என்றால் அது சட்டமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் செயலாக மாறிவிடும்” என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பில்  தெரிவித்துள்ளது.  


source https://tamil.indianexpress.com/tamilnadu/governor-cant-keep-bill-pending-indefinitely-sc-underlines-law-1706880