ராஜஸ்தான் முதல் தெலுங்கானா வரை, அசோக் கெலாட் முதல் பி.ஆர்எஸ் வரை, தேர்தல் வியூக வல்லுநர்கள் இருக்கிறார்கள், கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் பருந்துப் பார்வையில் மேலே இருந்து அடிமட்ட தொடர்பு வரை அனைத்திற்கும் உதவுகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் அசோக் கெலாட் ஆகியோருடன் பணிபுரியும் தேர்தல் வியூகவாதிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பருந்துப் பார்வையில் இருந்து அடிமட்ட தொடர்பு வரை அனைத்தையும் வழங்குவது குறித்து பேசினர்.
இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த சில நாட்களுக்குப் பிறகு, தேர்தல் வியூகவாதியான சுனில் கனுகோலு, முதல்வர் சித்தராமையாவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு, கேபினட் அந்தஸ்து ஒதுக்கப்பட்டது.
கர்நாடக தேர்தலில் வெற்றி வியூகத்தை வகுக்க கானுகோலு காங்கிரசுக்கு உதவியதாக கூறப்படுகிறது. சித்தராமையா ஆட்சியில் அவரது அடுத்தடுத்த உயர்வு, கட்சிகள் முழுவதும் பிரச்சாரங்களில் தேர்தல் வியூகவாதிகள் வகிக்கும் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை மீண்டும் கவனத்தில் கொள்ள வைத்தது. இதில் ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் முறையே நவம்பர் 25 மற்றும் நவம்பர் 30 தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
தெலுங்கானா தேர்தலுக்காக ஆளும் பாரத ராஷ்டிர சமிதியுடன் (பிஆர்எஸ்) இணைந்து செயல்படும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தேர்தல் வியூக நிபுணர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், அவரது குழு "பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக அம்சங்கள் தொடர்பாக - கிராம பஞ்சாயத்து அளவு வரை செயல்படக்கூடிய விஷயங்களை பி.ஆர். எஸ் மற்றும் அதன் தலைவர்களுக்கு வழங்குகிறது” என்று கூறினார்.
“ஆரம்பத்தில், தெலுங்கானாவில் உள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளிலும் நாங்கள் வேலை செய்தோம். ஆனால், தற்போது 50 தொகுதிகளில் கவனம் செலுத்துகிறோம். அங்கே கடுமையான போட்டி இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம் (ஒரு இடத்தில் பதிவான வாக்குகளில் 10% பிளஸ் அல்லது மைனஸ் இடையே வெற்றி வித்தியாசத்துடன்)” என்று தேர்தல் வியூக நிபுணர் கூறுகிறார். கள செயல்பாடுகள், அரசியல் நுண்ணறிவு, டிஜிட்டல் மீடியா மற்றும் பிரச்சாரம் என்று அவருடன் வெவ்வேறு நிலைகளில் சுமார் 300 பேர் வேலை செய்கிறார்கள்.
இந்தத் துறையில் ஆரம்பகால வெற்றியாளர்களில் ஒருவரான பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் இதற்கு முன்னர் இருந்த தேர்தல் வியூகவாதி ஆவார், தேர்தலுக்காக அவர்கள் உருவாக்கிய வரைபடத்தை செயல்படுத்துவது குறித்து பி.ஆர்.எஸ் உயர்மட்ட நிர்வாகிகளுடன் தனது குழு தொடர்ந்து விவாதித்ததாகக் கூறுகிறார்.
ராகுல் காந்தியின் பிரச்சாரக் குழு உறுப்பினர் பிரீதம் பாட்டீல், அரசியல் ஆலோசனை வழங்கும் டீன் பந்தரைச் சேர்ந்தவர், இவர் “செயல்முறை மேலாண்மை, வியூகத்தை அடைவது (ஆன்லைன், மீடியா, ஆன்-கிரவுண்ட்), பக்கச்சார்பற்ற அரசியல் நுண்ணறிவு மற்றும் பிரச்சாரத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் உள்ளீடு செய்திகளை வழங்குவதாகக்” கூறுகிறார்.
“கட்சி வரம்புக்கு அப்பாற்பட்டு பெரும்பாலான வேட்பாளர்கள் பொதுவாக ஒரு தொழில்முறை ஆலோசகர் குழுவிற்கு பதிலாக ஒரு சில நபர்களை ஆலோசகர்களாக வைத்துள்ளனர். இந்த நபர்கள் பொதுவாக தலைவர்களின் தனிப்பட்ட உதவியாளர்கள் அல்லது சமூக ஊடக மேலாளர்கள். பெரும்பாலான விஷயங்களுக்கு அவர்கள் தொண்டர்களையே நம்பியிருக்கிறார்கள், அதன் உள்ளீடுகள் பெரும்பாலும் பக்கச்சார்பானவை” என்று பாட்டீல் கூறுகிறார். அவருடைய வேலையின் பெரும்பகுதி தலைவர்களுக்கு புதிய யோசனைகள் மற்றும் முன்னோக்குகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது. “இது ஒரு புத்திசாலித்தனமான, பொறுப்பான முறையில் தேர்தல்களின் குழப்பத்தை ஒழுங்கமைக்கிறது.” என்று கூறினார்.
பல மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களுடன் ஆலோசகராக பணியாற்றி வரும் மேகனா கூறுகையில், “ஒரு வேட்பாளர் அல்லது கட்சியின் செய்திகள் - களத்தில் மற்றும் டிஜிட்டலில் - அவர்களின் வாக்காளர் தளத்திற்கு அப்பால் சென்றடைவதை உறுதி செய்வதே அரசியல் ஆலோசனையின் முதன்மை வேலை.” என்று கூறுகிறார்.
“ஒரு கட்சி அல்லது வேட்பாளருக்கு ஒரு தொகுப்பு விவரம் உள்ளது, ஆனால் கட்சியின் சித்தாந்தத்திற்கு சந்தா செலுத்தும் போது அவர்களின் நேர்மையான பக்கத்தை வெளிப்படுத்துவதே எங்கள் வேலை. இது அவர்களின் வாக்காளர்களுடன் தனிப்பட்ட தொடர்பை ஏற்படுத்த உதவுகிறது, இதனால் தேர்தலில் அவர்களின் வாய்ப்புகள் பிரகாசமாகின்றன” என்று மேகனா கூறுகிறார்.
ஒரு ஆலோசனை நிறுவனம், பிராந்தியம் அல்லது மாநிலத்தின் அரசியல் நிகழ்வுகளைப் பற்றிய பார்வையை அடிக்கடிக் கொண்டிருப்பதாகவும், இதனால் கட்சி அல்லது அதன் வேட்பாளர்களின் பிரச்சாரத்தை மேம்படுத்தி சிறந்த முடிவுகளை அடைய உதவுவதாகவும் மேகனா கூறுகிறார். “சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியைப் பதிவுசெய்ய உதவிய முக்கியக் காரணிகளில் ஒன்று ஆலோசனையின் தூண்டுதலே, அதற்கு கர்நாடகா ஒரு சிறந்த உதாரணம்.” என்ரு கூறினார்.
வியூகங்கள், பேரணிகள், வாக்காளர்களைச் சென்றடைதல் மற்றும் செய்தி அனுப்புதல் ஆகியவற்றைத் தவிர, கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் ஆலோசகர்கள் நிர்வகிக்கும் மற்றொரு முக்கிய விஷயம் பிராண்டிங் செய்வதாகும்.
ராஜஸ்தானில் தற்போதைய முதல்வர் அசோக் கெலாட்டுக்கான பிரச்சாரத்தைக் கையாளும் டிசைன் பாக்ஸ்டு-வின் (DesignBoxed)முக்கிய உறுப்பினர் கூறுகிறார், “புதுமையான பிராண்டிங் என்பது ஒரு பிரச்சாரத்தின் கூறுகளில் ஒன்றாகும், இது கவனிக்கப்படாமல் உள்ளது, ஆனால் தாக்கத்தைப் பொறுத்தவரை, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாங்கள் டிசைன் பாக்ஸ்டு-வில் வழக்கமான வியூகங்களைத் தவிர்த்து, வேட்பாளர் அல்லது கட்சி எங்கள் பிராண்டிங் மூலம் மக்களின் மொழியைப் பேசுவதை உறுதிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் முயற்சிகள் பலனளிப்பதாக நாங்கள் உணர்கிறோம், இது டிசம்பர் 3 தேர்தல் முடிவுகளில் தெளிவாகத் தெரியும்.” என்று கூறினார்.
சில தலைவர்களுக்கு பல ஆலோசகர்களும் சுதந்திரமாக பணியாற்றி வருகின்றனர். அரசியல் வியூகவாதி பி. சதீஷ், முன்பு ஒரு முன்னணி ஆலோசனை நிறுவனத்தில் இருந்தவர், இப்போது பி.ஆர்.எஸ் தலைவருடன் பணிபுரிகிறார். “வேட்பாளருக்கான நடுநிலை வாக்காளர்களை நாங்கள் வாக்குச்சாவடி வாரியாகக் கண்டறிந்து, அவர்களை குறிவைத்து குறிப்பிட்ட வியூகங்களை வகுக்க தலைவருக்கு உதவுகிறோம்” என்று அவர் கூறுகிறார்.
source https://tamil.indianexpress.com/india/telangana-and-rajasthan-assembly-elections-strategists-helping-parties-with-poll-game-plan-1706613