சி.பி.ஐ மாநிலங்களவை எம்.பி பினோய் விஸ்வம், சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலையின் (ICF) எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்து, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியன் ரயில்வே மற்றும் டிதாகர் ரயில் சிஸ்டம்ஸ் லிமிடெட் (TRSL) என்ற தனியார் நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து ICF ஊழியர்கள் மத்தியில் 'பீதி' ஏற்பட்டுள்ளது. கோச் தொழிற்சாலையின் 'சிறந்த தொழில்நுட்பத் திறனை' எம்.பி பினோய் விஸ்வம் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
“தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள இந்திய ரயில்வேயின் ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலையின் (ICF) எதிர்காலம் தொடர்பான விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவரவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
வடிவமைப்பு, தரம் மற்றும் செலவு குறைந்த உற்பத்தியில் அதன் செயல்திறன் மூலம் இந்திய ரயில்வேயின் வரலாறு முழுவதும் இந்த தொழிற்சாலை அதன் வலிமை மற்றும் திறமையை நிரூபித்துள்ளது. மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான வந்தே பாரத் ரயில்களில் கூட அதன் 68 ஆண்டுகால பாரம்பரியம் பொதிந்துள்ளது.
இவ்வளவு நல்ல விஷயக்கள் இருந்தபோதிலும், இந்த பொதுத்துறை பிரிவு (PSU) அதன் முழுமையான சரிவை ஏற்படுத்தும் சிக்கல்களை எதிர்கொள்கிறது.
ஐசிஎஃப் ஒரு பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால், ரயில் இன்ஜின், அதனுடன் இணைந்த உதிரி பாகங்களைத் தயாரித்தல் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குதல் ஆகிய இரட்டைக் கடமைகளை வழங்குகிறது. இருப்பினும், இந்திய ரயில்வே மற்றும் Titagarh Rail Systems Ltd (TRSL) என்ற தனியார் நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது என்ற செய்தி ICF ஊழியர்களிடையே பீதியை உருவாக்கியுள்ளது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் உற்பத்தியை தனியாருக்கு வழங்குவது தொழிற்சாலையை பெரிதும் பலவீனப்படுத்தும்.
தொழிற்சாலை வளாகத்தை அதன் செயல்பாடுகள் மற்றும் வேலை வாய்ப்புகளை அவுட்சோர்சிங் செய்வதற்கு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி, பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தித்திறனை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு, அதன் ஊழியர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்கு உட்படுத்தும்.
ஐ.சி.எஃப்-ன் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன, அவை தனியார் மூலம் நிரப்பப்படலாம்.
தனியார் TRSL உடன் ஒப்பிடும் போது, ஐசிஎஃப் உற்பத்தி செலவு குறைந்ததாகும்.
பொதுத்துறை நிறுவனத்தை விட தனியார் நிறுவனத்திற்கு முன்னுரிமை அளித்தால், அது சாதாரண மக்களின் பணத்தை வீணடிக்கும் மற்றும் பாதுகாப்பான வேலை வாய்ப்புகளை இழக்கும்.
எனவே அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸின் (AITUC) செயல் தலைவர் விஸ்வம், ஐசிஎஃப் ஊழியர்களின் கவலைகளை விரைவில் தீர்க்க ரயில்வே அமைச்சரை வலியுறுத்தினார்.
ஆத்மநிர்பார் பாரதின் உண்மையான சாரத்தை கடைப்பிடித்து, தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய ரயில்வே அமைச்சரை வலியுறுத்துகிறேன், காலியிடங்களை நிரப்புதல் மற்றும் பணியாளர்களை வலுப்படுத்துதல் உட்பட ஐசிஎஃப் ஊழியர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்" என்று எம்பி தனது கடிதத்தில் எழுதினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-integral-coach-factory-mp-binoy-viswam-railway-minister-ashwini-vaishnaw-1704433