உலகளவில் 64.3 மில்லியன் மக்களுக்கு குளுக்கோமா பாதிப்புள்ளது. இதில் 2.1 மில்லியன் மக்கள் குளுக்கோமாவால் கண் பார்வையை இழந்துள்ளார்கள் என நம்பப்படுவதாகவும் அதில் 40 வயதிற்கு மேற்பட்டோர் மட்டும், சுமார் 11.9 மில்லியன் எனவும் இந்தியர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு 12.8 சதவிகிதம் பேர் கண்பார்வையை மேலும் இழக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த நோயின் பாதிப்பு பற்றி பல்வேறு தரப்பட்ட மக்களிடம் நடத்திய ஆய்வுகளின் படி சுமார் 2 சதவிகிதம் முதல் முதல் 13 சதவிகிதம் வரை பாதிப்பு ஏற்படும் என்பதை வேலூர் கண் ஆய்வு, சென்னை குளுக்கோமா ஆய்வு, அரவிந்த் கண் ஆய்வு, ஆந்திர மாநில கண் நோய் ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
கண்பார்வை இழப்பை தடுக்கக்கூடிய பல காரணங்களில் குளுக்கோமா மூன்றாவது இடத்தில் இருப்பதால் இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது அவசியம் என கண் மருத்துவர் மற்றும் குழந்தைகள்நலக் கண் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஆண்டு தோறும் மார்ச் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை உலக குளுக்கோமா வாரமாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். இதனை தொடர்ந்து தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையில் உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த உள்ளனர்.
உலக குளுக்கோமா வாரமாக, மார்ச் 10 ஆம் தேதி முதல்15 ஆம் தேதி வரை நாடு முழுவதும் கடைபிடிக்கபட்டு வருகிறது. இந்த தினத்தை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் தி.ஐ. ஃபவுண்டேஷன் மருத்துவமனை பலவேறு நிகழ்ச்சிகளை நடத்த முன்வந்துள்ளது.
இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை ஆர். எஸ்.புரம்.பகுதியில் உள்ள தி.ஐ பவுன்டேஷன் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர். சித்ரா ராமமூர்த்தி மற்றும் குழந்தைகள் நலக் கண் மருத்துவர் முரளிதர் கூறியதாவது.,
குளுக்கோமா நோயாளிகள் சிறப்பாக சிகிச்சை பெறவேண்டும் என்பதற்காக மார்ச் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 'தி ஐ ஃபவுண்டேஷன்' மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் இலவச கண் பரிசோதனை வழங்கப்பட உள்ளது.
மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள விரும்பும் நோயாளிகளுக்கு 10 சதவீத கட்டணச் சலுகையும் வழங்கப்பட உள்ளது. மருத்துவமனை சார்பில் பல்வேறு ஊர்களில் இலவச கண் பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
உலக குளுக்கோமா வாரம் என்பது குளுக்கோமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக குளுக்கோமா சங்கத்தின் உலகளாவிய முயற்சியாக உள்ளது.
தொடர்ச்சியான உலகளாவிய நடவடிக்கைகளின் மூலம், நோயாளிகள், கண் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள், பார்வையைப் பாதுகாப்பதில் பங்களிக்க உள்ளதாகவும், குளுக்கோமாவைக் கண்டறிவதற்காக வழக்கமான கண் சோதனைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை அவர்களிடம், அறிவுறுத்துவதே இதனுடைய குறிக்கோள் என தெரிவி்த்தனர்.
உலகளவில் 64.3 மில்லியன் மக்களுக்கு குளுக்கோமா பாதிப்புள்ளது. இதில் 2.1 மில்லியன் மக்கள் குளுக்கோமாவால் கண் பார்வையை இழந்துள்ளார்கள் என நம்பப்படுகிறதாகவும் அதில் 40 வயதிற்கு மேற்பட்டோர் மட்டும், சுமார் 11.9 மில்லியன் எனவும் இந்தியர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு 12.8 சதவிகிதம் பேர் கண்பார்வையை மேலும் இழக்க வாய்ப்புள்ளது.
இந்த நோயின் பாதிப்பு பற்றி பல்வேறு தரப்பட்ட மக்களிடம் நடத்திய ஆய்வுகளின் படி சுமார் 2 சதவிகிதம் முதல் முதல் 13 சதவிகிதம் வரை பாதிப்பு ஏற்படும் என்பதை வேலூர் கண் ஆய்வு, சென்னை குளுக்கோமா ஆய்வு, அரவிந்த் கண் ஆய்வு, ஆந்திர மாநில கண் நோய் ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
கண்பார்வை இழப்பை தடுக்கக்கூடிய பல காரணங்களில் குளுக்கோமா மூன்றாவது இடத்தில் இருப்பதால் இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, அவசியமாயிருக்கிறது என தெரிவித்தார்.
இதனால் குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 10 முதல் 15 வரை எங்களது அனைத்து கிளைகளிலும் குளுக்கோமா நோயாளிகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை வழங்கப்படும் மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி கோயம்புத்தூர் தி
.ஐ.பவுண்டேஷன் கண் மருத்துவமனை முன்னிலையில் மனித சங்கிலி விழிப்புணர்வு நடத்த உள்ளோம் என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான்- கோவை மாவட்டம்
source https://tamil.indianexpress.com/lifestyle/glucoma-attack-doctor-report-8833229