வியாழன், 3 ஏப்ரல், 2025

இந்தியப் பொருட்கள் மீது 26% வரி: அமெரிக்க அதிரடி அறிவிப்பு

 1 4 25 

26

இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும், ஏப்.2-ஆம் தேதி முதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்று அதிபா் டிரம்ப் தெரிவித்திருந்தாா். தற்காலிகமான வரிகள், நாட்டை மாற்றி அமைக்கும் முக்கிய வரிவிதிப்புகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றார். அமெரிக்க பொருட்கள் மீது எந்த அளவு வரி விதிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு பதிலுக்கு வரி விதிப்போம் என்று டிரம்ப் திட்டவட்டமாக கூறி வந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டிரம்ப் வியாழக்கிழமை (ஏப். 3) அறிவித்துள்ளாா். டிரம்ப் மேலும் கூறுகையில், "இது விடுதலை நாள். இந்த நாள் அமெரிக்க தொழில்துறை மீண்டும் பிறந்த நாளாகவும், அமெரிக்காவின் தலைவிதி மீட்டெடுக்கப்பட்ட நாளாகவும், அமெரிக்காவை மீண்டும் பணக்கார நாடாக மாற்றத் தொடங்கிய நாளாகவும் என்றென்றும் நினைவுகூரப்படும். நாம் அதை நல்ல நாடாக மாற்றுவோம், பணக்கார நாடாக மாற்றுவோம்" என்றார்.

அதன்படி, அமெரிக்காவுக்கு 52% வரி விதிக்கும் இந்தியாவுக்கு பரஸ்பர வரியாக இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி விகிதத்தை 26%-ஆக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்திய பொருள்களுக்கு சலுகையுடன் கூடிய வரிவிதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்கள் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34% கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்து இருக்கிறார். டிரம்பின் இந்த வரி வதிப்பு அறிவிப்பால் சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்படும் அபாயமும் பொருளாதார நிச்சயமற்ற சூழலும் ஏற்படும் அபாயமும் இருப்பதாக பொருளதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்தியா, சீனா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு எதிராகவும் பரஸ்பர வரியை டிரம்ப் விதித்து இருக்கிறார். அதிகபட்சமாக கம்போடியா மீது 49% , வியட்நாம் மீது 46% , இலங்கை மீது 44%, இந்தோனேசியா - 32% பரஸ்பர வரி விதிக்கப்பபடுவதாக அறிவித்துள்ளார்.

அதேபோல, அமெரிக்காவில் தயாரிக்காமல் இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீது 25% வரி விதிக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் பேசுகையில், இந்த வரி விதிப்புகள் முழுமையாக பரஸ்பரம் இல்லை, ஓரளவுதான் என்றார். அவர் ஒரு விளக்கப்படத்தை காட்டினார். அதில் இந்தியா, சீனா, UK மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் விதிக்கும் வரிகள் இருந்தன. அந்த நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்கும் புதிய வரிகளும் அதில் காட்டப்பட்டன.

தற்போது 25 நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் அறிவித்த புதிய வரிவிதிப்பு ஏப்ரல் 9 முதல் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/international/trump-slaps-26-reciprocal-tariffs-on-india-8919315

Related Posts: