செவ்வாய், 1 ஏப்ரல், 2025

ரம்ஜான் பண்டிகை : வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

 source https://news7tamil.live/ramadan-festival-banks-will-operate-as-usual-today-reserve-bank-of-india-announcement.html

31 3 2025 ரம்ஜான் பண்டிகை : வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், 2024-25 நிதியாண்டின் இறுதி நாளாக இருப்பதால் இன்று வங்கிகள் மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்கள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.

முன்னதாக ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்கிகள் மூடப்படும் என ஆர்பிஐ அறிவித்திருந்தாலும், கணக்குகளை முடிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் வங்கிகள் வழக்கம்போல் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்து வங்கிகள் மற்றும் அரசாங்க வருவாய் மற்றும் செலவுகளை நிர்வகிக்கும் கிளைகள் மார்ச் 31ஆம் தேதி வழக்கமான பணிநேரத்தில் பணியாற்ற வேண்டும். அரசு பரிவர்த்தனைகள் தொடர்பான கவுன்ட்டர் பரிவர்த்தனைகளுக்காக திறந்திருக்க வேண்டும். மார்ச் 31ம் தேதியிட்ட காசோலைகளையும் கிளியர் செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டிற்கான (2024-25) அனைத்து அரசு பரிவர்த்தனைகளையும் மார்ச் 31, 2025க்குள் கணக்கிட்டுக் கொள்ள வசதியாக, மார்ச் 31 அன்று அரசு காசோலைகளுக்கு பிரத்தியேகமாக CTS இன் கீழ் சிறப்பு தீர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்கள் ஆகியவற்றை அன்றைய தினம் செலுத்தலாம். இதர பொதுவான வங்கி சேவைகள் இன்று இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts:

  • உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மீண்டும் ஆயுள் தண்டனை.18 ஆண்டுகளைக் கழித்தவர்களுக்குமீண்டும் ஆயுள் தண்டனை. பாவிகளின் சட்டம், பாவமான தீர்ப்பு. யா அல்லாஹ். தாங்கிக்கொள்ள முடியாத ச… Read More
  • டான்சில் டான்சில் என்பது தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி. தொண்டையில் சதை வீங்குவதை டான்சில் என்று மக்கள் பொதுவாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஐஸ்கிரீம் ச… Read More
  • சண்டிகரில் இரண்டு குடிநீர் பாட்டிலை 312 ரூபாய்க்கு விற்ற ஹோட்டலுக்கு 27 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சா… Read More
  • ‪#‎SDPI‬ 25 தொகுதிகளில் போட்டி!! எஸ்.டி.பி.ஐ கட்சி தனித்து போட்டியிடும் தொகுதிகள்: ‪#‎பாளையங்கோட்டை‬, ‪#‎கடையநல்லூர்‬ , ‪#‎மதுரை‬(மத்தி),‪#‎திருவாடனை‬ ,&nbs… Read More
  • மூல வியாதி குணமாக: மூல வியாதி குணமாக: துத்திக் கீரை என்ற ஒன்றைகேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த துத்திக்கீரையை தினந்தோறும் சமையலில் சாப்பிட்டுவந்தால் மூலநோய் தலைக் காட… Read More