ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

2024 புயலுக்குப் பிறகு தருமபுரி, கிருஷ்ணகிரியில் அதிகபட்ச மழை பதிவு: இன்று பெங்களூருவில் கன மழை; சென்னை நிலவரம் என்ன?

 rain

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமானவது வரை மழை பெய்து வரும் நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற 'ஃபெங்கல்' புயலுக்குப் பிறகு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி பகுதிகளில் மிகக் கனமழை பதிவாகியுள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற 'ஃபெங்கல்' புயலுக்குப் பிறகு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி பகுதிகளில் மிகக் கனமழை பதிவாகியுள்ளது 

உள் மாவட்டங்களுக்கு இன்றைக்கும் மிகப்பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருச்சி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு மற்றும் டெல்டா பகுதிகள் உட்பட பெரும்பாலான உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் வழக்கம்போல மதுரை மற்றும் சிவகங்கை பகுதிகளில் மழை பெய்யும். பெங்களூரில் இன்று இந்த ஆண்டின் மிகக் கனமழை பதிவாகும்.

கடந்த 2 நாட்களாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளை மழை மேகங்கள் மிக அருகில் கடந்து தவறவிட்டுவிட்டன. நம்பிக்கையோடு எதிர்பார்ப்போம், இன்று இந்தப் பகுதிகளும் மழைப் பட்டியலில் இணையும் என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே மழை வாய்ப்பு குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழக பகுதிகள் வழியாக ஒரு வடக்கு - தெற்கு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. 

அதன் காரணமாக இன்றும் நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-weatherman-update-tamilnadu-rain-update-in-tamil-12554398