திங்கள், 3 பிப்ரவரி, 2014

50 கோடி பறிமுதல் அதிர்ச்சி தகவல்...



பி.ஜே.பி ஆளும் மத்திய பிரதேச மாநில உயரதிகாரி ஒருவரிடம் 50 கோடி பறிமுதல் அதிர்ச்சி தகவல்...

மாநில தொழிலாளர் நலத்துறை இணை கமிஷனர் ரவிகாந்த் திவேதி என்பவரின் அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு துவங்கி, நேற்று காலை வரை 'லோக் ஆயுக்தா' போலீசார் சோதனை நடத்தியதில் முறைகேடாக சேர்த்த பணம் சொத்துகள் 50 கோடி ரூபாய் அளவிற்கு கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு அதிகாரியை சோதனையிட்டதில் 50 கோடி சிக்கினால், அமைச்சர்களை முதலமைச்சரின் பினாமிகளை சோதனையிட்டால் எத்தனை கோடிகள் சிக்குமோ ??? .

மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால் இதை விடமோசமான ஊழல்கள் நடக்கும். என்பதற்கு இது ஒரு உதாரணம்.

லோக்ஆயுக்தாவினர் கண்டுப் பிடிக்கும் வரை மத்தியப்பிரதேச முதல்வர் மற்றும் ஆட்சியாளர்களுக்கு இது தெரியாமல் இருக்குமா ?.

மேல் மட்டத்திலிருந்து கீழ்மட்ட அதிகாரிகள் வரை எங்கே எவ்வளவு சுருட்டுகின்றனர் என்பது முதல்வர் முதல், அமைச்சர்கள் வரை தெளள்த் தெளிவாகத் தெரியும்.

இவர்கள் நேர்மையாளர்களாக இருந்திருந்தால் நாட்டு நலனின் மீது அக்கறை கொண்டவர்களாக இருந்திருந்தால் அதிகாரிகள் ஊழல் செய்யும் ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து அதை கஜானாவில் சேர்த்து ஊழல் செய்தவரை பதவி நீக்கம் செய்ய முடியும்.

ஆனால் செய்ய மாட்டார்கள் ஏன் என்றால் அதிலிருந்து அவர்களுக்கும் குறிப்பிட்டத் தொகை ஒதுக்கபபடுகிறது.

இன்னும் அது பெரியத் தொகை என்றால் அதிகபட்சம் அது முதல்வர் போன்ற பெரிய பொறுப்பில் உள்ளவர்களுடைய பினாமியாக இருக்கும்.

பிடிபட்டதும் தங்களுக்கு எதுவும் தெரியாதது போல் நாடகமாடுவர். அல்லது இவர்களுக்கு சேரவேண்டியதை முறையாக கொடுக்கவில்லை என்றால் இவர்களே மாட்டியும் விடுவார்க்ள.

கடந்த கால எடியூப்பா தொடங்கி இன்றைய ரவிகாந்த் திவேதி வரை பாஜக ஆளும் மாநிலங்களின் இதுப்போன்ற ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

கரைப் படியாத கரங்கள் என்று இந்த ஊழல் பெருச்சாளிகளை வர்ணிக்கும் ஊடகத்துறையின் சில மதவெறி ஊடகவியாளர்களே சிந்திக்க மாட்டீர்களா ?.

ஊடகம் என்பது நாட்டின் முதுகெலும்பு என்பதை அறிந்திருந்தும் நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டி நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் இதுப்போன்ற அயோக்கியர்களை அவர்கள் இந்துத்துவா எனும் ஒரே காரணத்துக்காக தாங்கிப்படிப்பது முறையா ?.

அதுவும் ஒரு சில மாநிலங்களோடு நிருத்தி விடாமல் இவர்களின் வானளாவிய ஊழலை மத்தியில் வரை பரப்ப நினைப்பது தேசத்துக்கு இழைக்கும் துரோகமாகத் தெரிய வில்லையா ?.

பிற கட்சிகள் ஊழல் செய்வதோடு மட்டும் நிருத்திக் கொள்வார்கள், இவர்கள் சொந்த நாட்டு மக்களை மத அடிப்படையில், சாதி அடிப்படையில் கொன்று குவிக்கும் கொலை வெறியர்களாகவும் இருப்பது இந்த ஊடகவியாளர்களுக்குத் தெரியவில்லையா ?.

இதனால் நாடு பொருளாதாரத்தில் பின்டைவை சந்திப்பதுடன் உலக அரங்கில் இந்தியா மதவெறி நாடு என்ற அவப்பெயரை அடைந்து தேசியக்கொடி கேவலப்படுத்தப்பட்டு இவர்களின் காவி (பாஜக) கொடியை உயர்த்திப் பிடிக்கும் நிலை உருவாவதை இவர்கள் அறிய வில்லையா ?.

இவர்களை விட இந்த ஊடகவியாளர்கள் நாட்டின் துரோகிகளாக இருப்பதை பொது மக்கள் அறிந்து இவர்களின் ஊடகங்களை புறக்கணிக்க முன்வர வேண்டும்.