புதன், 12 பிப்ரவரி, 2014

சமஉரிமை வழங்கி சமத்துவம் பேணி ‪#‎இஸ்லாம் நிகழ்த்திய அற்புதம்!




கடவுளைக் காண(?) கதவை உடைத்த பக்தர்கள்(?) : - சிந்திப்பார்களா?

அடைத்துவைத்த அறையிலிருந்து கடவுளை பார்க்க தடைபோட்டதால் கதவை உடைத்துக் கொண்டு பக்தர்கள் வெளியேறிய சம்பவம் பல செய்திகளை நமக்கு உணர்த்துகின்றது.

கடவுளை பிரார்த்திக்க பணம் தேவையா?

பணம் இல்லாவிட்டால் இப்படி பக்தர்களை ஆடு மாடுகளை அடைத்து வைப்பது போல அடைத்து வைப்பீர்களா?

அதே நேரத்தில் மறுபுறம் கோவிலின் உள்ளே காரில் போய் சென்று இறங்கி வழிபாடு நடத்திவிட்டு வருகிறார் காஞ்சி சங்கராச்சாரியார்.

‪#‎பணம் இருப்பவர்களுக்கு ஒரு மாதிரியும், பணம் இல்லாதவர்களிடம் ஒரு மாதிரியும் கடவுள் நடப்பாரா?

பணம் இல்லாத ஏழைகளும், தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படுவோரும் கோவிலுக்குள் நுழைய பெரிய விலை கொடுக்க வேண்டுமா என்பன போன்ற பல கேள்விகள் இதில் எழுகின்றன.

இறைவனை வணங்க எழுப்பப்பட்ட முதல் ஆலயம் கஃபாவை அனைவருக்கும் சமமானதாக ஆக்கியுள்ளோம் என்று வல்ல இறைவன் தனது திருமறையில் கூறுகின்றான்.

பள்ளிவாசல்களில் பேணப்படும் சமத்துவத்தையும், பிறமதங்களில் பணம் இருப்போரையும், பணம் இல்லாதோரையும் படுத்தும் பாடுகளையும் ஒப்பிட்டு பார்க்கின்றோம்.

பெரும் அற்புதம் புரிந்த இந்த இஸ்லாத்தை நமக்கு அளித்ததற்காக வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றோம்.