ஃபஜ்ரு தொழுகையின் போது
பிலால் (ரலி)யிடம் நபி
(ஸல்) அவர்கள்,
'பிலாலே! இஸ்லாத்தில்
இணைந்த பின்
நீர் செய்த
சிறந்த செயல்
பற்றிக் கூறுவீராக!
ஏனெனில் உமது
செருப்புச் சப்தத்தை சொர்க்கத்தில் நான் கேட்டேன்'என்றார்கள். அதற்கு
பிலால் (ரலி)
'இரவிலோ, பகலிலோ
நான் உளூச்
செய்தால் அந்த
உளூவின் மூலம்
தொழ வேண்டும்
என்று நான்
நாடியதைத் தொழாமல்
இருந்ததில்லை. இது தான் நான் செய்த
செயல்களில் சிறந்த செயல்'என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 1149, முஸ்லிம்
4497
தொழுகையில் நெஞ்சின் மீது
கை வைத்தல்
கைகளை உயர்த்தி, வலது
கையை இடது
கையின் குடங்கையின்
மீது வைத்து
நெஞ்சின் மீது
வைக்க வேண்டும்.
அல்லது வலது
முன்கையை இடது
முன்கையின் மேற்பகுதி, மணிக்கட்டு, குடங்கை ஆகிய
மூன்று இடங்களிலும்
படுமாறு வைக்க
வேண்டும்.
'நபி (ஸல்) அவர்கள்
(தொழுகையில் ஸலாம் கூறும் போது) தமது
வலது புறமும்,
இடது புறமும்
திரும்பியதை நான் பார்த்தேன். (தொழுகையில்) இதை
நெஞ்சின் மீது
வைத்ததை நான்
பார்த்தேன்' என்று ஹுல்புத்தாயீ (ரலி) கூறினார்கள்.
இந்த ஹதீஸின்
அறிவிப்பாளர் யஹ்யா என்பவர் இதை என்று
சொல்லும் போது,
வலது கையை
இடது கையின்
மணிக்கட்டின் மீது வைத்துக் காட்டினார் என்று
இமாம் அஹ்மத்
பின் ஹம்பல்
குறிப்பிடுகின்றார்கள்.
நூல்: அஹ்மத் 20961