26 அட்டை பெட்டிகளில் 625 கிலோ
எடையுள்ள பயங்கர
சக்தி வாய்ந்த
டெட்டனேட்டர்கள் பறிமுதல்...?
செஞ்சியிலிருந்து விழுப்புரம் நோக்கி
சென்ற ஒரு
மினிவேனை போலீசார்
வழிமறித்து சோதனையிட்டதில் பெரும் நாசத்தை விளைவிக்கும்
பயங்கர சக்தி
வாய்ந்த டெட்டனேட்டர்கள்
கைப்பற்றப்டுள்ளது.
வேன் டிரைவர் ஜெயவேலு
(வயது 32) ஆரணியை
சேர்ந்த டெல்லி
ராமு (48) ஆகியோரை
போலீசார் கைது
செய்தனர்- மாலைமலர்.
அவர்கள் இரண்டு பேரும்
பத்திரிகை தர்மத்தில்
பயங்கரவாதிகள் அல்ல இன்ன ஊரைச் சேர்ந்த
இன்னார் அவ்வளவு
தான்.
அந்த இருவரும் பெரும்
கேடு விளைவிக்கக்
கூடிய பயங்கர
சக்தி வாய்ந்த
டெட்டனேட்டர்களை எதற்கு எடுத்துச் சென்றார்கள் ?.
இவ்வாறு எடுத்துச் சென்றவர்கள்
பயங்கரவாதிகள் இல்லையா ?.
இவர்களை ஏன் பயங்கரவாதிகள்
என்று மாலைமலர்
எழுதவில்லை ?.
மாலை மலரின் மலைக்கண்
பார்வையில் இவர்கள் அஹிம்சாவாதிகளா ?.
முஸ்லீம்கள் என்றால் ஒரு
பார்வை , ஹிந்துக்கள்
என்றால் ஒரு
பார்வை என்ற
நிலை போலிஸ்
துறையிலிருந்தும், நீதித் துறையிலிருந்தும்,
பத்திரிகை துறையிலிருந்தும்,
துடைத்தெறியப்படாத வரை இந்தியா
ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற
நாடாக கருத
முடியாது.
ஏன் என்றால் ? ஹிந்து
முஸ்லீம்கள் மத்தியில் கலவரம் உருவாக பல
வழிகளில் அன்றைய
ஆங்கிலேய அரசு
நாட்டின் பிரிவினைவாதிகளான
Rss காரர்களுக்கு மிகவும் பக்க பலமாக திகழ்ந்தது
என்பதற்கு ஒரு
சான்று:
1837ல் பகதுர்ஷா அவர்கள்
டில்லி அரியணையில்
ஏரியதும், மக்கள்
மத்தியில் அவருக்கிருந்த
செல்வாக்கை முறியடிக்க பிரிட்டீஷார் செய்த முயற்சிகள்
பல. அதில்
ஒன்று 1847ல்
ஆங்கில அதிகாரி
கெய்த் தன்
மனைவிக்கு எழுதிய
கடிதத்தில், நாளை ஈத் பெருநாள் என்பதால்
முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பானி கொடுப்பர் இந்துக்களின்
புனித வழிபாட்டுக்குரியதான
மாடுகளை முஸ்லிம்கள்
குர்பானி கொடுப்பதா?
என்று இந்துக்கள்
கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நாளை
டில்லியில் இந்து, முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக்
காத்திருக்கிறேன் என்று எழுதினான்.
இந்த நாசப்பின்னணியை அறிந்த
பகதுர்ஷா ஈத்
பெருநாளுக்கு முந்திய நாள் இரவு, இந்த
வருடம் மட்டும்
''ஆடுகளை மட்டுமே
குர்பானி கொடுக்க
வேண்டும் மாடுகளை
குர்பானி கொடுக்க
வேண்டாம்'' என்று பிரகடனப் படுத்தினார் இதனால்
கெய்த்தின் சூழ்ச்சி கானல் நீரானது... ஆதாரம்:
வீரசாவர்க்கர், எரிமலை. பக்கம்,58.
அன்று ஆங்கிலேயர்களும், Rss காரர்களும் செய்த சதி திட்டம்
பகதூர்ஷா அவர்களுக்கு
அறிய வந்ததால்
மிகப்பெரும் கலவரத்தை தடுத்து நிருத்த முடிந்தது.
இன்று அரசாங்க பொறுப்புகளில்
முஸ்லீம்கள் அதிகம் இல்லாததால் யார் எங்கு
சதிவலை பிணணுகின்றனர்
என்பதை அறிய
முடிவதில்லை
அதனால் இதில் அரசாங்கம்
தீவிரமாக தலையிட்டு
சதிகாரர்களின் சதித் திட்டத்தை முறியடிக்க முன்வர
வேண்டும்.
யார் தப்பு செய்தாலும்
தப்பு தான்,
தப்பு செய்தவர்கள்
இழிவடைவதில், தண்டனை அனுபவிப்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இதில் இனம், மொழி,
மதம் கடந்த
நேர்மையான பார்வை
வேண்டும் என்பதே
நமது நோக்கம்.
இதன் விஷயத்தில் பாரபட்சமாக
மதங்களுடன் இணைத்து இழிவான வாரத்தைகளை எழுதும்
மதவெறிக் கொண்ட
ஊடகங்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும். அப்பொழுது
தான் நாட்டில்
அமைதி தவழும்.
இப்பொழுது நாட்டிற்கு மிகப்பெரிய
அச்சுறுத்தலாக திகழ்வது ஊடகம் தான், ஊடகங்களை
கண்காணிக்க் ஒரு விசேஷக் குழுவை அரசு
அமைக்க வேண்டும்.