நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: நம் இறைவன் திரையை அகற்றித்
தன் காலை
வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள
ஒவ்வோர் ஆணும்,
இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும்
அவனுக்கு முன்னால்
சஜ்தா செய்வார்கள்.
முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப்
பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து
வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள்
சஜ்தா செய்ய
முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய
முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.
அறிவிப்பவர்: அபூசயீத்
(ரலி),நூல்:
புகாரி 4919
அபூமூசா (ரலி) அவர்கள்
கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு
மனிதர் வந்து,
"அல்லாஹ்வின் தூதரே! ஒரு
மனிதர் இன
மாச்சரியத்திற்காகப் போரிடுகின்றார். ஒருவர்
வீரத்தை வெளிக்காட்டப்
போரிடுகின்றார். இன்னொருவர் பிறருக்குக் காட்டிக் கொள்வதற்காகப்
போரிடுகின்றார். இவர்களில் இறைவழியில் போரிடுகின்றவர் யார்?''
என்று கேட்டார்.
நபி (ஸல்)
அவர்கள், "எவர் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய்
இருக்க வேண்டும்
என்பதற்காகப் போரிடுகின்றாரோ அவர்தாம் அல்லாஹ்வின் பாதையில்
போரிடுபவர் ஆவார்'' என்று பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி 7458