புதன், 19 பிப்ரவரி, 2014

அமைதி பூங்கா

அமைதி பூங்கா தமிழகத்தில் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் உடலை மனித வெடிகுண்டின் மூலம் துண்டு துண்டாக்கி மண்ணில் வீசிய கொடூர கொலையாளிகள் மூவரின் மரண தண்டனை ரத்து:

ஆஹா வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு !.

இந்திய வரலாற்றில் கரை படிந்த இந்த தீர்ப்பை கேட்டு மிருகங்கள கூட வெட்கி தலைகுணியும்.

பணத்துக்கும், புகழுக்கும் அல்லது சாதிவெறிக்கும், மொழி வெறிக்கும் தலை வணங்கும் நீதிபதிகள் இருக்கும் வரை மதசார்பற்ற இந்தியா உலக அரங்கில் தலைகுணிவதையும், மண்ணைக் கவ்வுவதையும் எவராலும் தடுக்க முடியாது.

இந்த தீர்ப்பு வரலாற்று பொண்ணேடுகளில் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பு என்று வெட்கமில்லாமல் தேசப் பற்று இல்லாத அரசியல் பச்சோந்தி வைகோ வாந்தி எடுக்கிறார்.

இந்த வாந்தி அவருடைய அமைப்யை வளர்க்க உதவும், நாட்டு நலனை காக்க உதவாது.

தனிப்பட்ட முறையில் பிரபாகரனை சந்தித்து வந்தப் பிறகு தான் இவர் புலிகளுக்காக ஊளையிட்டார் என்பது உலகறிந்த விஷயம்.

கடந்த 2000த்தில் அந்த மூவருடைய கருணை மனுக்கள் ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டு இது மன்னிக்க முடியாத குற்றம் என்பதால் மீண்டும் கருணை மனு கொடுக்க முடியாத அளவுக்கு அந்த கருணை மனுவை 11 ஆண்டுகள் முடக்கப்பட்டு 2011ல் தான் ரத்து செய்தார் ஜனாதிபதி.

எப்பொழுதுமே இது போன்றவர்களை வெளியேக் கொண்டு வர இறுதியாக ஜனாதிபதியையே விலை பேசுவர் கொலையாளிகளின் வாரிசுகள் ஆனால் இதில் ஜனாதிபதி விலை போகாததால் நீதிபதிகளை விலைபேசி விட்டனர்.

அப்சல் குரு நிரபராதி என்று அறிந்தப் பின்னரும் அவருடைய கருணை மனு நிராகரிக்கப்பட்டு அவருடைய மனைவிக்குக் கூட தகவல் கொடுக்காமல் வலுக்கட்டாயமாக தூக்கு கயிற்றில் ஏற்ற உத்தரவிட்டனர் இந்த நீதிபதிகள்.

மொழிவெறியும், இனவெறியும் நீதிபதிகளுடைய உள்ளத்தில் கோலோச்சும் வரை நீதிபதிகளே நீதியின் குரல்வளைகளை நெறித்து கொலை செய்யத்தான் செய்வர்.

நாட்டின் முதுகெலும்பாகிய நீதித்துறையே நாட்டின் தன்மானம் காக்க நீதியை நிலை நாட்டு ...!

இஸ்லாம் நீதி செலுத்தச் சொல்கிறது அதையும் எப்படித் தெரியுமா ?. தன்னை சார்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் பகைவர்களாக இருந்தாலம் கூட நீதியை சரியாக செலுத்தச் சொல்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். திருக்குர்ஆன்.5:8