வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

Hadis

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியர்களுக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவையும், அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று ஆர்வமூட்டியும் அவனுக்கு மாறு செய்யக்கூடாத என்ற எச்சரிக்கையும் பிறப்பிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.

ஓர் இரவில் நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து (பதற்றத்துடன்) விழித்தெழுந்து "அல்லாஹ் தூயவன்! இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனைகள் (குழப்பங்கள்)தாம் என்ன! (இன்றிரவு) திறந்துவிடப்பட்ட கருவூலங்கள்தாம் என்ன!'' என்று கூறிவிட்டு, (தம் துணைவியரை மனத்தில் கொண்டு) "இந்த அறைகளிலுள்ள பெண்களை எழுப்பிவிடுங்கள்! (அவர்கள் அல்லாஹ்வை வணங்கட்டும்.) ஏனெனில், இவ்வுலகில் உடை அணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுவுலகில் நிர்வாணிகளாய் இருப்பார்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி) நூல் : புகாரீ 115

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்! நூல் : புகாரீ 2024