புதன், 12 பிப்ரவரி, 2014

மானம்கெட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.


நிர்வாண படம் என்பது ஆபாசமாக ஆகாது; அது பார்க்கக்கூடியவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது என்று உச்சநீதிமன்றம் ஒரு மானம்கெட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

பார்க்கக்கூடியவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்துத்தான் ஒவ்வொரு விஷயத்திலும் தீர்ப்பளிப்பாதாக இருந்தால் அரசியல் அமைப்பு சாசன சட்டம் எதற்கு? நீதிபதிகள் எதற்கு? வழக்கு விசாரணை எதற்கு?

அனைவருமே தனது கண்ணோட்டத்தின் அடிப்படையில் தான் ஒவ்வொரு தவறையும் செய்து வருகின்றனர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு ஆகிய சமூக விரோத செயல்களைச் செய்பவர்களது கண்ணோட்டத்தில் பார்த்தால் அது சரியானதுதான். அதனால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு ஆகிய சமூக விரோத செயல்கள் சரியானது என்று இந்த நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்களா?

நிர்வாண படம் என்பது ஆபாசமாக ஆகாது; அது பார்க்கக்கூடியவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது என்பது உண்மை என்றால் இந்த நீதிபதிகள் தனது மனைவியையோ அல்லது மகளையோ இதுபோன்று நிர்வாணமாக உலவ விட்டு புகைப்படம் எடுத்து உச்ச நீதிமன்றத்தில் தொங்கவிட்டு படம் காட்டுவார்களா?


By TNTJ