புதன், 26 பிப்ரவரி, 2014

Hadis


அல்லாஹ்வைத் திட்டி விடக்கூடாது

அல்லாஹ்வுக்கு கண் இல்லையா! இவன் எல்லாம் ஒருகடவுளா! எனக்கு கஷ்டத்தை கொடுத்தவன் இறைவனே கிடையாது. என்றெல்லாம் பேசாது பொறுமையோடு இருக்க வேண்டும்

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும்உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக.

‪#‎அல்குர்ஆன் : 2:155

அடக்கவிடம் (கப்று) அருகில் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “"அல்லாஹ்வைப் பயந்துகொள்! பொறுமையாயிரு!'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி1252

ஹஸன் அல்பஸரீ அவர்கள் கூறியதாவது: ஜுன்தப் (ரலி) அவர்கள் இந்த (பஸ்ராவின்) பள்ளிவாசலில் வைத்து எங்களிடம் (ஒரு ஹதீஸைக்) கூறினார்கள். அதை நாங்கள் மறக்கவில்லை. மேலும் ஜுன்தப் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் பொய்யைக் கூறியிருப்பார் என்று நாங்கள் அஞ்சவுமில்லை. அவர்கள் கூறியதாவது: "ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்துகொண்டார். உடனே அல்லாஹ், "என் அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கிவிட்டேன்'' எனக் கூறினான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜுன்தப் (ரலி) நூல் : புகாரி 1364

(((((((((((((
தனக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை எண்ணி, மரணத்தைக் கேட்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாகவேண்டும் என்றிருந்தால் "இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின் எனக்கு இறப்பைத் தருவாயாக!'' என்று கேட்கட்டும்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி 5671