புதன், 26 பிப்ரவரி, 2014

மாஷா அல்லாஹ்.


சவூதி பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையின் அல்லாஹ் மீதான அச்சத்திற்கும் நேரமைக்கும் கிடைத்த பரிசு!

சவூதி அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையிடம், அவரின் நேர்மையை சோதிக்கும் வண்ணம், சவூதிகள் சிலர் அவர் வைத்திருந்த ஆட்டை தமக்கு தரச்சொல்லி கேட்க,

அவரோ, 'இது தனது ஆடில்லை, இன்னொருவரின் ஆடுகள்' என்று கூறி தரமறுக்க,

அவரிடம் 'ஆடு தொலைந்து விட்டது' என்று உரிமையாளரிடம் பொய் கூறி தன்னிடம் 200 ரியாலுக்கு விற்றுவிட கேட்க...

அவரோ... '200,000 ரியால் தந்தாலும் அடுத்தவரின் ஆட்டை விற்க தரமாட்டேன்' என்று கூற,

அந்த சோதனையாளர்கள் அவரிடம் 'இங்கு தான் யாரும் உன்னை பார்க்கவில்லையே, பிறகு ஏன் பயம் கொள்கிறீர்?' என்று வறுபுறுத்த,

அதற்கு அந்த முஸ்லிம் சகோதரன் கூறியவார்த்தை... 'அல்லாஹ் எங்கு சென்றான்...

அல்லாஹ் என்னை பார்க்கவில்லையா...

அவன் நம்மை பார்க்கிறானே... " என்று பதில் கூறி ஆட்டை தர/விற்க திடமாக மறுத்துவிடுகிறார்.

இது பற்றிய காணொளி யூ ட்யூபில் வந்தவுடன்... அந்த சூடானிய ஆடு மேய்க்கும் சகோதரருக்கு பரிசுத்தொகை எக்கச்சக்கமாக நாலா புறத்தில் உள்ள நல்லவர்கள் வழியாக அல்லாஹ்வின் அருட்பார்வையில் குவிந்த வண்ணம் உள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஆம்..! அந்த சகோதரனுக்கு சவூதியில் உள்ள சூடானிய தூதரகம் 200,000   சவூதி ரியால் பணத்தை அந்த சகோதரனுக்கு பரிசாக கொடுத்துள்ளது.

மாஷா அல்லாஹ்.

இன்னொரு இடத்தில் 20,000 சவூதி ரியால் வெகுமதி கிடைத்துள்ளது.

மேலும் 20,000 சவூதி ரியால் பரிசுப்பணமும் கிடைத்துள்ளது.

அல்லாஹ் தனது திருமறையில் கூறியதை நிறைவேற்றியுள்ளான்.

"(அல்லாஹுவை அஞ்சினால் )அவர் எண்ணியிராத விதத்தில் வாழ்வாதரங்களை அல்லாஹ் வழங்குவான் எவர் அல்லாஹுவின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன் "(63 - 3 )

இறைவா..! வறுமையிலும் இறையச்சத்துடன் கையூட்டு பெறாமல் பொய் சொல்லாமல் நேர்மையாக வாழ்ந்த இந்த சகோதரனை போல்... உன்மீதான அச்சத்தை எனக்கும் அதிகப்படுத்துவாயாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

பைஜுர் ரஹ்மான்

Related Posts: