வியாழன், 6 பிப்ரவரி, 2014

முஸாஃபர் நகர் படுகொலைக்கு காரணமான

முஸாஃபர் நகர் படுகொலைக்கு காரணமான பா.ஜ.க, எம்.எல்.ஏ. தேர்தல் பிரச்சாரகராக நியமனம்.



கலவரத்தை தூண்டி விடும் வகையில் போலி வீடியோ வெளியிட்டதாகவும், பொதுமக்களை கிளர்ச்சியில் ஈடுபட ஊக்கப்படுத்தியதாகவும் ஆதாரத்துடன் குற்றம் சாட்டப்பட்டு கடந்த செப். 21ம் தேதி இவர் கைது செய்யப்பட்டார். இரண்டு மாதத்திற்குப் பின் ஜாமீனில் விடுதலையானார். தற்போது லோக்சபா தேர்தலையொட்டி உ.பி.யில் பாஜகவுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இதுபோன்ற காரியங்களில் முஸ்லீம்கள் ஈடுபட்டிருந்தால் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள். பல வருடங்கள் முதல் தகவல் அறிக்கையே பதியாமல் வதைப்பார்கள்.

இதே பாஜகவில், ஆர்.எஸ்.எஸ்ஸில் அங்கம் வகித்தால் தேசியவாதிகள்.???. சில நாட்களில் அல்லது சில மாதங்கிளல் முதல் தகவல் அறிக்கைப் பதியாமலேயே வெளியில் வந்துவிடுவர்.

முசாபர் நகர் கலவரம் தொடர்பாக சங்கீத்சிங் சோம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்:

இந்த கலவரத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் பலியானதற்கு பொதுக் கூட்டங்களில் நீங்களும் உங்களைப் போன்ற தலைவர்களும் இந்துக்கள் புறக்கணிக்கப்படுவதாக பேசுவதால் தான் பிரச்னைகள் வெடிப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு.

உண்மை அதுவல்ல முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக மார் தட்டிக் கொள்ளும் சமாஜ்வாதி அரசு முஸ்லிம் பகுதிகளில் சரியான போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யவில்லை. அது தான் முஸ்லீம்கள் அதிகளவில் பலியானதற்கு காரணம் என்றுக் கூறி உள்ளார்.

முஸாஃபர் நகர் கலவரத்தில் முஸ்லீம்கள் அதிகளவில் கொல்லப்படுவதற்கு மிகப்பெரிய காரணமாக இருந்தவர் முஸ்லீம்களுககு போலீஸ் பாதுகாப்பு குறைவாக இருந்தததால் தான் எங்களால் இலகுவாக அவர்களை கொல்ல முடிந்தது என்று சொல்கின்றார் என்றால் எந்தளவுக்கு முஸ்லீம்களின் ஓட்டுகளை வாங்கிக் கொண்டு முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு(?) வழங்குகின்றனர் ?.

முஸ்லீம்களுடைய வாக்குகளால் தான் முலாயம் சிங்கின் கட்சி உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைக்க முடிந்தது. ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு ஓட்டுப் போட்ட முஸ்லிம்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க முடியவில்லை என்றாலும் உயிர் போகும் நேரத்திலாவது காப்பாற்றக் கூடாதா ?.

இதை விடவும் முஸாஃபர் நகர் கலவரத்தை தூண்டி விட்டவன் என்று ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டவரை நிரந்தரமாக உள்ளேத் தள்ள அல்லது குறைந்தது ஒரு இரண்டு வருடமாவது வெளியில் வர முடியாமல் வைக்க முடியாத அரசு என்ன அரசு ?.

இரண்டே மாதத்தில் வெளியே வந்ததுடன் அல்லாமல் கட்சிக்காக தீவிர பரச்சாரத்தில் இறங்கி செயல்படுகின்றார், மக்களை சந்திக்கின்றார் என்றால் முஸ்லீம்களுடைய திட்டமிட்ட கொலைகளுக்கு நீதி எங்கே ?.

பதிலளிக்க வேண்டும் உத்தரப் பிரதேச அரசு !. வருகின்ற தேர்தலில் முஸ்லீம்களுடைய வாக்குகள் இதை தீர்மாணிக்கும்.

முஸ்லீம்களின் பாதுகாப்பு இந்திய அளவில் கேள்விக் குறி தான் ?. தமிழகத்தில் நடந்ததைப் போன்று அனைத்து மாநிலங்களிலும் அரசு வேலை வாய்புகளில் போதிய இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தினால் தான் இதற்கு ஒரேத் தீர்வாக அமையும்..