வியாழன், 22 ஜனவரி, 2015

தொழில் பதிவு- 3


உற்பத்தி, மதிப்பு கூட்டுதல் தொழில் பற்றிய விவரங்களை இன்றைய பகுதியில் பார்ப்போம்.
உற்பத்தி,மதிப்பு கூட்டுதல் தொழில் தொடங்குவதற்கு முன் இன்றைய சந்தை நிலவரம், அதற்கான மூலப்பொருட்கள், விலை நிலவரம், உபகரணங்கள்,தொழில் நுட்பம், தகுதியான 
தொழிலாளர் தேர்வு, அனைத்து வசதியுடனுள்ள இடம், சந்தைபடுத்துதல் போன்றவை மிக முக்கியம். தற்போதுள்ள சந்தை நிலவரப்படி, தரமான தனித்தன்மை கொண்ட பொருட்களை சரியான விலையில் உற்பத்தி செய்தால் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எளிதில் 
சந்தைப்படுத்தலாம்.
உற்பத்தி செய்யும் பொருட்களின் ஆயுட்காலம், தன்மை, தேவை அடிப்படையில் நேரடியாகவோ அல்லது மதிப்பு கூட்டிதல் மூலம் எல்லா காலங்கள் மற்றும் தட்டுபாடின்றி சந்தைப்படுத்தி நல்லவருவாய் ஈட்டலாம். உதாரணமாக, தக்காளி, பழங்கள், உணவுப்பொருட்கள், அழகு சாதனப்பொருட்கள் போன்றவை நேரடியாகவோ அல்லது மதிப்பு கூட்டி பதப்படுத்தி விற்கலாம். மதிப்பு கூட்டிதல் முறையில் பொருட்கள் வீணாவதை தடுப்பதுடன், ஏற்றுமதியை அதிகமாக்குவதன் மூலம் நம் தொழில் மேம்படுவது
மட்டுமின்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கலாம்.
இவ்வகை தொழில்கள் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத்தில் தொடங்கினால் வெற்றி பெற முடியும். உங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களைவிட தரமானது என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தொழிலில் சுமுகமான அணுகு முறையே வெற்றிக்கு வழிவகுக்கும. நமது சிறிய சேமிப்பினை வைத்து தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக்கூடாது. மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக்கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழங்குகிறது.
மானியம் வழங்கப்படும் தொழில்கள்:
மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு
மருந்துப் பொருட்கள் உற்பத்தி
சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
ஏற்றுமதி ஆபரணங்கள்
மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
விளையாட்டுப் பொருட்கள்
சிக்கன கட்டுமானப் பொருட்கள்
ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்
அரசு வழங்கும் சலுகைகள்:
15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு((வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.