செவ்வாய், 6 ஜனவரி, 2015

நெல்லிக்காயின் முத்தான நன்மைகள்



ஆயுர்வேதத்தில் முக்கிய பொருளாக விளங்கும் நெல்லிக்காயில், வைட்டமின் சி அதிகளவில் நிறைந்துள்ளது.
இந்த நெல்லிக்காயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அப்படியே சாப்பிடலாம்.
மூளையின் செயல்திறனை அதிகரிப்பதுடன், உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்றுகிறது.
கொழுப்புக்கு டாட்டா
உடல் பருமன் நோயினால் அவதிப்படுபவர்கள் நெல்லிக்கனியை சாப்பிடுவது அவசியமாகும்.
ஏனெனில் நெல்லிக்காயில் உள்ள அதிக அளவிலான புரதச்சத்துக்கள் நம் உடலிலுள்ள கொழுப்பைக் கரைத்து அகற்றுகிறது.
கவர்ச்சிகரமான கண்களுக்கு
கண் புரை என்னும் பார்வை நோயைத் தவிர்ப்பதில் நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது.
மேலும் கண் சிவப்பாதல், கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல், மாலைக் கண் உள்ளிட்ட பலவிதமான பிரச்சனைகளை போக்குவதற்கும் நெல்லிக்காய் உதவுகிறது.
இதை தினமும் சாப்பிட்டால் கண்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
ஆரோக்கியமான இதயத்திற்கு
நம் இதயத்திற்கும் பலவிதமான பலன்களை நெல்லிக்காய் அளிக்கிறது.
கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, அதன் விளைவாக இதயத்தைப் பாதுகாக்கிறது, மேலும் இதயத்திற்குள் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
வலுவான தலைமுடிக்கு
நம் தலைமுடியை வலுவாக்குவதில் கால்சியத்தின் பங்கு அதிகம் உள்ளது.
இந்தக் கால்சியம் நம் உடலுக்குள் எளிதாக ஊடுருவுவதற்கு நெல்லிக்காய் உதவுகிறது.
எனவே நாம் உபயோகப்படுத்தும் ஷாம்புக்களில் நெல்லிக்காய் சேர்க்கப்பட்டிருந்தால் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
மாதவிடாய் வலிகளைக் குறைக்கிறது
மாதவிடாய் நாட்களில் பெண்கள் நெல்லிக்காயை எடுத்துக் கொள்வதால், அப்போது ஏற்படும் வலிகள் குறையும்.
வாய் நாற்றத்திற்கு
நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளும் விலகி ஓடும்.
மேலும் பற்களை வலுவாக்கும், ஈறுகளில் ஏற்படும் தொற்றுக்களையும் ஆற்றுகிறது.