புதன், 28 ஜனவரி, 2015

கேடுகட்ட இந்த மவ்லிதுகளை இனியும் ஓதலாமா? ஆதரிக்கலாமா?..




அல்லாஹ்வின் பால் வஸீலாவைத் தேடுங்கள் என்றால் அல்லாஹ்வின் பால்நெருங்குவதற்கான வழியைத் தேடுங்கள் என்பதாகும்.
இந்தப் பொருளில் மேற்கண்ட இரு வசனங்களுக்கும் பொருள் செய்து பாருங்கள். மூஃமீன்களேஅல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் பால் நெருங்குவதற்கான (வஸீலாவை) வழியைத்தேடிக் கொள்ளுங்கள். இப்படிப் பொருள் கொள்ளும் போது இந்தக் கட்டளை முழுமையாகஅனைவராலும் நிறைவேற்றப்படத்தக்கதாக அமைகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வை அஞ்சினார்கள். அவன் பால்நெருங்குவதற்கான வழியைத் தேடினார்கள். நல்லடியார்களும் தேடினார்கள்.
வஸீலா என்பதன் பொருள் இறைவனை நெருங்குவதற்காக இறைவன் நமக்குக் கற்றுத் தந்துள்ளதொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், மற்றுமுள்ள வணக்க வழிபாடுகளே. அந்த வணக்க வழிபாடுகள்மூலமாக இறைவனின் நெருக்கத்தைத் தேட வேண்டும். அதையே வஸீலா பற்றிக் கூறும்வசனங்கள் கூறுகின்றன. அகராதியில் கூறப்பட்ட பொருளுக்கு இது தான் பொருத்தமாக உள்ளது.
மேலும் இவ்வாறு பொருள் கொள்வது தான் அறிவுக்கு ஏற்றதாக உள்ளது. எப்படியென்று பார்ப்போம்.
ஒரு முதலாளியிடம் நாம் சம்பளத்திற்கு வேலை செய்கிறோம். அவரது கட்டளைகளைச் சரியாகசிறப்பாக நிறைவேற்றிவிட்டு அவரிடம் சென்று ஐயா நீங்கள் கூறிய வேலைகளைச் சிறப்பாகச்செய்து முடித்து விட்டேன். எனக்கு இதைத் தாருங்கள். அதைத் தாருங்கள் என்று கேட்கிறோம்.அவர் மகிழ்ந்து நாம் கேட்டதைத் தருவார்.
அந்த முதலாளியிடம் நம்மைப் போல் மற்றும் சிலர் பணியாற்றுகின்றனர். அவர்கள் நம்மைவிடச் சிறப்பாகவும் பணி புரிகின்றனர். நாம் அந்த முதலாளியிடம் சென்று ஐயா நீங்கள் கூறியபணிகளை இவர்கள் சிறப்பாகச் செய்துள்ளனர். எனவே எனக்கு இதைத் தாருங்கள். அதைத்தாருங்கள் என்று கேட்கிறோம். இவ்வாறு நாம் கூறுவதைக் கேட்டால் நாம் சுய நினைவுடன் தான்கூறுகிறோமா என்ற ஐயம் கொள்வார். அவர்கள் சிறப்பாகப் பணியாற்றியதற்காக உனக்கேன்நான் எதையும் தர வேண்டும்? என்று கேட்பார். இந்த நிலையில் இன்னாரின் பொருட்டால் இதைத்தா என்று வஸீலாவுக்குப் பொருள் கொள்ளக்கூடிய நிலையும் உள்ளது.
இறைவா உனது கட்டளைகளைச் சரியாக நிறைவேற்றினேன். அதற்காக இதைத் தா என்றுகேட்டால் அர்த்தமிருக்கிறது. இவ்வாறு கேட்பதை விடுத்து. இறைவா இந்த நல்லடியார் உனதுகடமைகளைச் சரியாக நிறைவேற்றியதால் எனக்கு இதைத் தா என்று கேட்பதில் ஏதேனும்அர்த்தமள்ளதா? அவர்கள் எனது கடமைகளைச் செய்தால் அவர்களுக்கு நான் கொடுப்பேன்.அவர்கள் எனது கடமைகளைச் செய்வதற்காக உனக்கு நான் ஏன் தர வேண்டும்? என்றெல்லாம்இறைவன் கேட்க மாட்டானா? சாதாரண மனிதர்களுக்கு விளங்கக்கூடிய நியாயம் இறைவனுக்குவிளங்காது என்று இவர்கள் நினைக்கிறார்களா? இந்த அர்த்தமற்ற உளறலில் உள்ள அபத்தத்தைப்புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இறைவன் இருக்கின்றானா? இதைச் சிந்திப்பவர்கள்வஸீலாவின் சரியான பொருள் என்னவென்பதை உணர்வார்கள்.
முஹம்மதின் பொருட்டால் எனது பாவத்தை மன்னிப்பாயாக என்று ஆதம் (அலை) அவர்கள்கூறியுள்ளார்களே என்று சிலர் கேட்கலாம். இந்தச் செய்தி ஆதாரமற்றதும், இட்டுக்கட்டப்பட்டதுமாகும். இந்தச் செய்தி பல்வேறு நூல்களிலும் இடம் பெற்றிருந்தாலும்அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பார் வழியாகவே அனைத்து நூல்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவர் தமது தந்தை வழியாக ஏராளமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைஅறிவித்தவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே இந்தச் செய்தியைஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
மேலும் ஆதம் (அலை) அவர்கள் எவ்வாறு எந்த வார்த்தைகளைக் கூறி பாவமன்னிப்புத்தேடினார்கள் என்று திருக்குர்ஆன் விளக்கமாகக் கூறுகின்றது.. அதற்கு முரணாகவும் இந்தச்செய்தி அமைந்துள்ளது. (பாவ மன்னிப்புக்குய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம்பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்;நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 2:37)
பாவம் செய்த ஆதம் (அலை) அதற்காக எவ்வாறு மன்னிப்புக் கேட்பது என்ற வழியைச் சுயமாகஅறிந்து கொள்ளவில்லை. அந்த வழியையும் அதற்குரிய வார்த்தைகளையும் இறைவனே கற்றுக்கொடுத்தான். அந்த வார்த்தைகளைக் கூறி அவர் மன்னிப்புக் கேட்டதால் அவர் மன்னிக்கப்பட்டார்என்று இவ்வசனம் கூறுகின்றது.
இறைவன் அவருக்கு கற்றுக் கொடுத்த வார்த்தைகள் என்ன, அதையும் திருக்குர்ஆன் வேறொரு இடத்தில் கூறுகிறது.
'எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்துஇ அருள்புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம் ' என்று அவ்விருவரும் கூறினர்.
(அல்குர்ஆன் 7:23)
தங்களது பாவத்தையும் இறைவனது கருணையையும்இ வல்லமையையும் ஒரே நேரத்தில்நினைவு கூர்ந்துஇ தங்கள் தவறைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு தங்களுக்கு வேறு நாதியில்லைஎன்பதையும் உணர்ந்து கொண்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். இப்படித்தான்அவர்கள் மன்னிப்புக் கேட்டார்கள். தவிர முஹம்மத் பொருட்டால் என்று கேட்கவில்லை.அவ்வாறு கேட்டிருந்தால் அவ்வாறு இறைவன் கற்றுக் கொடுத்திருந்தால் அதை நிச்சயமாகஇறைவன் கூறியிருப்பான்.

இந்த பிரார்த்தனையில் கூட ஆதம் (அலை) வஸீலா தேடியுள்ளனர். இறைவனின் முன்னால்சரணடைவதும் அவனது வல்லமையைக் கூறிப் புகழ்வதும் தனது இயலாமையை ஒப்புக்கொள்வதும் வஸீலா தான். இறைவனை நெருங்குவதற்கான வழி தான்.
இதனால் தான் அபூஹனீபா இமாம் உள்ளிட்ட பல்வேறு அறிஞர்கள், எவர் பொருட்டாலும்அல்லாஹ்விடம் கேட்கக் கூடாது. எவருக்காகவும் அல்லாஹ் எதையும் தர வேண்டுமெனகட்டாயம் ஏதுமில்லை என்று கூறியுள்ளனர்.
இப்போது மவ்லிதுக்கு வருவோம். யார் அப்துல் காதிர் ஜீலானி பொருட்டால் பிரார்த்திக்கிறாரோஅவரது தேவைகள் நிறைவேற்றப்படும் என்று கூறப்படும் வரிகள் திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் எதிரானதாகும் என்பதை விளங்கலாம்.
அப்துல் காதிர் ஜீலானியின் பொருட்டால் கேட்டால் அல்லாஹ் அதை ஏற்பான் என்றால் அதைஅல்லாஹ் தான் கூற வேண்டும். இவர் பொருட்டால் கேட்டால் அல்லாஹ் தருவான் என்பதைஇந்தப் பாட்டை எழுதியவர் எப்படி அறிந்து கொண்டார்? அல்லாஹ்விடத்தில் மறுமையில் இந்தப்பெரியார் உண்மையில் நல்லடியாராகத் தான் இருப்பார் என்பதையாவது யாராலும் அறியமுடியுமா?
இது போன்ற அபத்தங்களை நம்பி வழிகேட்டில் செல்லாமல் இறைவன் தான் காப்பாற்றவேண்டும்.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்களின் தொகுப்பேமுஹ்யித்தீன் மவ்லிது என்பதை நிரூபிக்கும் மற்றொரு அபத்தத்தைப் பாருங்கள்.
بل انه لم قط يفعل فعله *الا باذن الهه المتكلم
عهدا له ات لا يموت مريده*الا غلى ما تاب من مستاثم
அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது இறைவனின் அனுமதியின்றி ஒரு போதும் எந்தச்செயலையும் செய்ததில்லை. அவரது சீடராக இருப்பவர் தமது பாவத்துக்காக மன்னிப்புத்தேடாமல் மரணிக்க மாட்டார் என்பது (அல்லாஹ்) அவரிடம் செய்த உடன்படிக்கையாகும்.
மவ்லிதை உருவாக்கியவர்கள் அதை நியாயப்படுத்தக் கையாளும் மலிவான தந்திரத்தை இந்தக்கவிதை அம்பலப்படுத்துகின்றது.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வுக்குச் சமமாக காட்டக்கூடிய கற்பனைக்கதைகளை உண்மையான மூஃமீன்கள் நம்ப மாட்டார்கள் என்பதை மவ்லிதைஉருவாக்கியவர்கள் நன்றாக அறிவார்கள். ஏகத்துவத்தையே தகர்க்கக்கூடிய வகையில்மவ்லிதில் கூறப்படும் கதைகள் அமைந்துள்ளனவே என்று ஆட்சேபனை வரும் என்பதையும் நன்றாக அறிவார்கள். அத்தகைய ஆட்சேபனைகளைத் தவிர்ப்பதற்காகத் தான் அப்துல் காதிர்ஜீலானி செய்த யாவுமே அல்லாஹ்வின் அனுமதியோடு தான் செய்யப்பட்டன. அவனுக்குப்போட்டியாகச் செய்யப்படவில்லை என்ற கருத்தை மேற்கண்ட கவிதையில்வலியுறுத்தியுள்ளார்கள். இப்படிச் செய்வதால் ஏகத்துவத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதுஅவர்களின் வாதம்.

அப்துல் காதிர் ஜீலானி அல்லாஹ்வின் அனுமதியோடு தான் அல்லாஹ்வுக்கு மட்டுமேசொந்தமான காரியங்களைச் செய்தார்கள் என்றால் அதற்கான ஆதாரங்கள் என்ன?

எவற்றை அல்லாஹ் தனக்கு மட்டுமே உரித்தானது என்று திருக்குர்ஆனில் உரிமைகொண்டாடுகின்றானோ அவற்றைச் செய்ய மற்றவர்களுக்கு எப்படி அனுமதியளிப்பான்?

அப்படியே அனுமதிப்பது என்றால் இறைவனுடன் வஹீ என்னும் தொடர்புடையநபிமார்களுக்குத் தான் அனுமதிப்பான். அப்துல் காதிர் ஜீலானி அவர்களிடம் நேரடியாக பேசிஅனுமதி தந்தானா? அல்லது வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களை அவரிடம் அனுப்பிஅனுமதியளித்தானா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு மார்க்கம் முடிந்து விட்டது என்பதன்பொருள் என்ன? நானே இறுதி நபி எனக்குப் பின் எந்த நபியும் இல்லை என்ற நபிமொழியின்பொருள் என்ன? இப்படி ஆயிரமாயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்குமேஎன்று அந்த அறிவீனர்கள் சிந்திக்கவில்லை.

அபத்தமான கருத்துக்களைக் கூறுவோர். அதை நியாயப்படுத்த முடியாத போது மதிப்பு மிக்கபெரியார் இவ்வாறு கூறினார் என்று கூறி அப்பாவிகளை வாயடைக்கச் செய்வதை நாம்பார்த்திருக்கிறோம். அல்லாஹ்வின் பெயரிலேயே இட்டுக்கட்டக் கூடியவரை ஜாஹிலிய்யாக்காலத்துக்குப் பின் இந்த மவ்லிதில் நாம் சந்திக்கிறோம்.
அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது 'எங்கள் முன்னோர்களை இப்படித் தான்கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்' என்று கூறுகின்றனர்.'அல்லாஹ் வெட்கக் கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா? ' என்று கேட்பீராக!
(அல்குர்ஆன் 7.28)
மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டு அல்லாஹ்வின் மீது பழி போட்டவர்களை அல்லாஹ்இங்கே எச்சரிக்கிறான். மானக்கேடுகளிலெல்லாம் மிகப் பெரிய மானக்கேடான ஷிர்க்கையேஅல்லாஹ்வின் மீது பழிபோட்டு மவ்லிதை எழுதியவர் நியாயப்படுத்த முயல்கிறார். இந்தவசனம் இவருக்காகவே அருளப்பட்டது போல் இல்லையா? இதை மவ்லிது அபிமானிகள்சிந்திக்கட்டும்.
அதே வரியில் கூறப்படும் மற்றொரு அபத்தத்தைப் பாருங்கள். அப்துல் காதிர் ஜீலானியிடம்சீடராக இருந்தவர் பாவமன்னிப்புத் தேடாமல் மரணிக்க மாட்டார் என்று அல்லாஹ் உறுதிமொழிஎடுத்தானாம்.
அகில உலகுக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூடஇத்தகைய உறுதி மொழியை அல்லாஹ் வழங்கவில்லை. அவர்களிடம் சீடராக இருந்தவர்களில்பலர் மறுமையில் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவாகவிளக்குகின்றன.
எனது சமுதாயத்தில் சிலர் இடப்புறமாகக் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் என் தோழர்கள்என் தோழர்கள் என்று கூறுவேன். அதற்கு இறைவன் நீ அவர்களைப் பிரிந்தது முதல் அவர்கள்வந்த வழியே திரும்பிக் கொண்டிருந்தார்கள் எனக் கூறுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் புகாரி 3349ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நம்பிக்கைக்குசiயவராக இருந்துள்ளார். மற்றொருவர்அல்லாஹ்வின் பாதையில் தம் உயிரை அர்ப்பணித்தவராக இருந்துள்ளார். ஆயினும்இவ்விருவரின் கடைசிச் செயல்களோ மோசடியாக இருந்துள்ளது. மன்னிப்புக் கேட்காமல்மரணிக்க மாட்டார் என்ற உத்தரவாதம் நபித்தோழர்களுக்கே கிடைக்கவில்லை. அதனால் தான்அவர் நரகில் இருப்பார் எனக் கூறினார்கள்.

இது போல் ஏராளமான ஹதீஸ்களை நாம் காணலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேரில்பார்த்த நேரடியாக அவர்களிடம் பாடம் கற்ற தம் உயிரையும் அல்லாஹ்வின் பாதையில்அர்ப்பணிக்கத் தயாராக இருந்த நபித்தோழர்களே பாவ மன்னிப்புப் பெற்றவர்களாகத் தான்மரணிப்பார்கள் என்ற உத்தரவாதம் இல்லை என்றால் அப்துல் காதிர் ஜீலானியின் சீடர்களுக்குஇத்தகைய உத்தரவாதம் உண்டு என்பதை ஏற்க முடியுமா?
கேடுகட்ட இந்த மவ்லிதுகளை இனியும் ஓதலாமா? ஆதரிக்கலாமா? 3447
மற்றொரு அறிவிப்பில் ஹவ்ல் அல் கவ்ஸர் தடாகத்திலிருந்து சில மக்கள் தடுக்கப்படுவார்கள்.என் தோழர்கள் என் தோழர்கள் என்று நான் கூறுவேன். அப்போது முஹம்மதே உனக்குப் பின் இவர்கள் புதிதாக உருவாக்கியவைகளைப் பற்றி நீர் அறிய மாட்டீர் எனக் கூறப்படும் என்று நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
நூல்: புகாரி. 4625. 4740, 6526, 6576, 6582
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்த நல்லறத் தோழர்கள் கூட பாவமன்னிப்புப்பெற்றவர்களாக மரணிக்கவில்லை. அத்தகைய உத்தரவாதத்தைப் பெறவில்லை என்பதை இந்தஹதீஸ்கள் தெளிவாக விளக்குகின்றன. பாவமன்னிப்புப் பெற்றிருந்தால் அவர்கள் இடப்புறமாகப்பிடிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதருடைய சீடர்களுக்கு வழங்காத உறுதிமொழியைஅப்துல் காதிர் ஜீலானியுடைய சீடர்களுக்கு அல்லாஹ் வழங்கி விட்டான் என்று கூறும் இந்தக்கவிதையைப் படிக்கலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் இத்தகைய கவிதைகளைத் தீயிலிட்டுப் பொசுக்க வேண்டாமா? நபிகள் நாயகத்தை உண்மையாகவேநேசிக்கக் கூடியவர்கள் சிந்திக்கட்டும்.
நானும் உங்களைப் போன்ற மனிதன் தான். நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டுவருகிறீர்கள். உங்களில் சிலர் மற்ற சிலரை விட தமது வாதத்தை அழகுற எடுத்து வைக்கக்கூடும்.நான் கேட்கும் வாதத்தினடிப்டையில் அவருக்குச் சாதகமாக நான் தீர்ப்பளித்து விடுவேன். பிறரதுஉரிமையை ஒருவருக்குச் சாதகமாக நான் தீப்பளித்து விட்டால் அதைப் பெற்றுக் கொள்ளக்கூடாது. அவருக்காக நரகத்தின் ஒரு பகுதியை வழங்குகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி)
நூல் புகாரி 2458, 2680, 6967, 7169, 7181, 7185
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்வழக்குகளைக் கொண்டு வர முடியும். அவர்களைத் தமது வாதத் திறமையால் ஏமாற்றி தமக்குச்சாதகமான தீர்ப்பைப் பெற்று விட முடியும். ஆனால் மறுமையில் நரக நெருப்பை அடைவார்என்று இங்கே நபிகள் நாயகம் (ஸல்) எச்சரிக்கை செய்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் என்ற காரணத்துக்காக செய்த பாவம்அனைத்துக்கும் மன்னிப்பை நபித் தோழர்கள் பெறவில்லை. பெறுவார்கள் என்ற உத்தரவாதமும் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தளவாடங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் கிர்கிரா என்பார் இருந்தார். அவர் மரணிக்கும் போது இவர் நரகிலிருப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்கூறினார்கள். மக்கள் சென்று தேடிப்பார்த்த போது அவர் மோசடி செய்த ஒரு ஆடையைக்கண்டனர்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி 3074
கைபர் போல் ஒருவர் மரணித்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.அவருக்கு நீங்கள் தொழுகை நடத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்உடனே மக்களின் முகங்கள் மாறுதலடைந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்உங்கள் தோழர் அல்லாஹ்வின் பாதையில் மோசடி செய்து விட்டார் என்றார்கள். அவரதுபொருட்களை மக்கள் ஆராய்ந்தனர். அதில் யூதர்களுக்குச் சொந்தமான இரண்டு திர்ஹம்பெறுமதியில்லாத ஒரு மாலையைக் கண்டனர்.
அறிவிப்பவர்: யஸீத் பின் காலித் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 2335 நஸயீ 1933.
ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நம்பிக்கைக்குசiயவராக இருந்துள்ளார். மற்றொருவர்அல்லாஹ்வின் பாதையில் தம் உயிரை அர்ப்பணித்தவராக இருந்துள்ளார். ஆயினும் இவ்விருவரின் கடைசிச் செயல்களோ மோசடியாக இருந்துள்ளது. மன்னிப்புக் கேட்காமல்மரணிக்க மாட்டார் என்ற உத்தரவாதம் நபித்தோழர்களுக்கே கிடைக்கவில்லை. அதனால் தான்அவர் நரகில் இருப்பார் எனக் கூறினார்கள்.
இது போல் ஏராளமான ஹதீஸ்களை நாம் காணலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேரில்பார்த்த நேரடியாக அவர்களிடம் பாடம் கற்ற தம் உயிரையும் அல்லாஹ்வின் பாதையில்அர்ப்பணிக்கத் தயாராக இருந்த நபித்தோழர்களே பாவ மன்னிப்புப் பெற்றவர்களாகத் தான்மரணிப்பார்கள் என்ற உத்தரவாதம் இல்லை என்றால் அப்துல் காதிர் ஜீலானியின் சீடர்களுக்கு இத்தகைய உத்தரவாதம் உண்டு என்பதை ஏற்க முடியுமா?
கேடுகட்ட இந்த மவ்லிதுகளை இனியும் ஓதலாமா? ஆதரிக்கலாமா?..