வாட்ஸ்அப்பை பயன்படுத்த வாட்சிம் அறிமுகம்!
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான தகவல் பரிமாற்ற சேவைகளில் ஒன்றான வாட்ஸ்ஆப் நிறுவனம், சமீபத்தில் 700 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திவருகின்றனர் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் தற்போது வாட்சிம் என்ற ஒரு புதிய வகை சிம்மை அறிமுகப்படுத்தியுள்ளது, இது வாட்ஸ்ஆப்க்குகாக மட்டுமே பயன்படுத்தக்கூடிய சிம் ஆகும். இந்த சிம்மை பயன்படுத்தி சுமார் 150 நாடுகளில் பயணம் செய்யும் போது வாட்ஸ்ஆப்பை இலவசமாக பயன்படுத்தலாம்.
முக்கியமாக நாம் பயணம் செய்யும் போது டேடா கனெக்ஷன் வரையறையில் இருக்கும், ஏனெனில் ரோமிங் கட்டணங்கள் விலையுயர்ந்ததாக இருக்கும் மற்றும் வை-பை அனைத்து இடங்களிலும் கண்டுபிடிக்க முடியாது, அது எப்போதும் இலவசமாகவும் இருக்காது. இந்த ரோமிங் கட்டணப் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வாட்ஸ்அப்பினை இலவசமாக பயன்படுத்தும் வகையில் வாட்சிம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வாட்சிம்மை உருவாக்கிய ஜீரோ மொபைல் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
வாட்சிம்மை பயன்படுத்தி சுமார் 150 நாடுகளில் பயணம் செய்யும் போது ரோமிங் கட்டணம் இல்லாமல் இலவசமாக வாட்ஸ்ஆப்பினை பயன்படுத்தலாம். இந்த வாட்சிம்மினை விலை 10 யூரோக்கள் (சுமார் ரூ.714) ஆகும். ஆனால் இதில் மெசேஜ்களை மட்டுமே இலவசமாக பரிமாறிக்கொள்ள முடியும். எனினும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ போன்ற மல்டிமீடியா தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு கட்டணம் செலுத்தவேண்டும் எனக் குறிப்பிடப்படுகின்றது. எனினும் வாட்சிம்மில் சில வசதிகளை அறிவித்துள்ளது.
அதாவது, இந்தியாவில் 150 கிரெடிட்டுகளை கலெக்ட் செய்தால் போட்டோக்களையும், 600 கிரெடிட்டுகளை பெற்றால் வீடியோ மெசேஜ்களையும், 30 கிரெடிட்டுகளை பெற்றால் வாய்ஸ் மெசேஜ்களையும் இலவசமாக அனுப்ப முடியும். குறைந்த பட்சம் 5 யூரோக்களுக்கு ரீசாரஜ் செய்தால், 1000கிரெடிட்டுகளை பெற்றால், உலகம் முழுவதும் பல நாடுகளில் 50 புகைப்படங்கள் அல்லது 10 வீடியோக்கள் பரிமாறிக்கொள்ள முடியும். வாட்சிம்மினை தற்போது அதன் இணையத்தளத்தில் மட்டுமே பெற்றுக்கொள்ளமுடியும். எனினும், விரைவில் சுமார் 100 நாடுகளில் இதனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.