வெள்ளி, 30 ஜனவரி, 2015

அரசுப் பேருந்தில் ஹிந்துமத மாநாட்டு விளம்பரமா?




அரசு நிர்வாகம் சாதி,மத பேதங்களுக்கு அப் பாற்பட்டு இருக்க வேண்டும். அரசுநிர்வாகத்தில் மதத்தையோ, சாதியையோ இணைக்கக் கூடாது என்பது விதிமுறை. ஆனால் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகத்தின் உடுமலை பணிமனைக்குட்பட்ட அரசு பேருந்தில் ஒரு மதத்தின் மாநாடு குறித்த விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.அந்த விளம்பரத் திற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசு நிர்வாகம் அதனை அனுமதித்திருக்கிறது. ஏற்கெனவே தலைவர் களின் பெயரில் ஓடிய பேருந்துகளில் கூட சாதிய அடையாளம் காணப்பட்டு பிரச்சினை உருவானது.
அது தமிழகத்தின் சட்டஒழுங்கு பிரச்சினையான பின்பு, அனைத்துக் கட்சிகளின் முடிவிற்கேற்ப, அனைத்து அரசுபோக்குவரத்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற ஒரே பெயரில் இயக்கப்படுகிறது. ஆனால் தற்போது புதியதாக மதத்தின் பெயரால் இன்னொரு சட்ட ஒழுங்கு பிரச்சினையை உருவாக்க உடுமலை அரசு போக்குவரத்து பணிமனை வழி காட்டுகிறதோ ? என்ற அய்யம் உடுமலை பகுதி மக்களிடம் எழுந் திருக்கிறது. அரசு போக்குவரத்து கழக தலைமை நிர்வாகம் இதனை கவனிக்கின்றதா?

 Source: