7 11 23
காற்று மாசு எதிரொலியால், டெல்லியில் வருகிற 11ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பார்வைத்திறன் மிகவும் குறைந்துள்ளது. காற்றில் கலக்கும் நச்சுக் காற்று தற்போது மக்களின் உடல் நலத்தைக் கெடுத்து வருகிறது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனுடன், இருமல், நரம்புத் தளர்ச்சி மற்றும் கண்களில் எரியும் உணர்வு போன்ற பிரச்சனைகளையும் மக்கள் சந்திக்கின்றனர்.
இந்நிலையில், காற்று மாசு எதிரொலியால், டெல்லியில் வருகிற 11ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களில் ஒற்றைப்படை எண், இரட்டைப்படை எண் முறை வருகிற 13ம் தேதி முதல் 20ம் தேதி வரை அமல்படுத்தப்பட உள்ளது.
source https://news7tamil.live/air-pollution-echo-schools-to-remain-closed-in-delhi-till-11th.html