ஞாயிறு, 28 டிசம்பர், 2025

30 ஆண்டில் இல்லாத பனிப் பொழிவு... குளிரில் நடுங்கும் சவுதி; ஐஸ்லாந்தின் நிலவரம் தெரியுமா?

 

30 ஆண்டில் இல்லாத பனிப் பொழிவு... குளிரில் நடுங்கும் சவுதி; ஐஸ்லாந்தின் நிலவரம் தெரியுமா? 27 12 2025 

saudi

சவுதி அரேபியா என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது பாலை வனமும் அங்குள்ள கடுமையான வெயிலும் தான். ஆனால், சவுதி அரேபியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பனிப்பொழிவு அந்நாட்டு மக்களை நடுங்க வைத்துள்ளது.  டிசம்பர் 18-ம் தேதி தொடங்கிய இந்த மாற்றத்தால், அந்நாட்டின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகள் வெண்ணிறப் போர்வையால் மூடப்பட்டது போன்று காட்சியளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த பனிப்பொழிவு கடந்த 30 ஆண்டுகளில் ஏற்படாத வானிலை மாற்றம் என்று கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஐஸ்லாந்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. அதாவது, டிசம்பர் 25-ஆம் தேதி நள்ளிரவில் 19.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. இது அங்கு வழக்கமாக ஜூலை மாதத்தில் காணப்படும் சராசரி வெப்பநிலையை விட சுமார் 10 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

இது ஐஸ்லாந்து வரலாற்றில் பதிவான மிகக் கடுமையான மற்றும் விசித்திரமான காலநிலை நிகழ்வுகளில் ஒன்று என காலநிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஐஸ்லாந்தின் வெப்பநிலை குறித்து பலர் சமூக வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்டுள்ளனர். அதில்,  அமெரிக்கா மற்றும் ஐஸ்லாந்தில் காணப்படும் இந்த வெப்பநிலை வித்தியாசம் உண்மையிலேயே அதிர்ச்சிகரமாக உள்ளது. கிறிஸ்துமஸ் தினத்திற்கும் டிசம்பர் மாதத்திற்குமான வெப்ப நிலை இது இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

சவுதி அரேபியா குறித்து வெளியிட்டுள்ள பதிவில், கால நிலை மாற்றம். பாறைகள், பாலை வனங்கள் பனிகளால் சூழப்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவை உள்ளூர் வாசிகள் மிக ஆச்சர்யமான ஒன்றாக பார்க்கின்றனர். ஏனென்றால் அவர்கள் முதன் முதலாக இந்த பனிப்பொழிவை பார்க்கிறார்கள். மேலும், மக்கள் இந்த பனிப்பொழிவை உற்சாகமாக என்ஜாய் செய்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/international/saudi-arabia-sees-first-snow-fall-iceland-records-20-degree-celsius-10951153