/indian-express-tamil/media/media_files/2025/09/17/istockphoto-913946528-612x612-1-2025-09-17-08-14-16.jpg)
Gold Rate Today, 25 டிசம்பர்: தாறுமாறாக உயரும் தங்கம் விலை; 4 நாட்களில் மட்டும் ரூ.3,360 உயர்வு!
தங்கமும், வெள்ளியும் யார் பெரிய ஆள்? என்பது போல விலையில் போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ‘டாப் கியர்' போட்டு பந்தயத்தில் முன்னோக்கி சென்றது. கடந்த 15-ந்தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னரும் விலை குறைந்தபாடில்லை. தொடர்ந்து ஏறுமுகத்தை கண்டு வருகிறது. தங்கத்தைவிட அதிவேகத்தில் வெள்ளி உச்சம் தொட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது.
25 12 2025
இந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.1,02,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,820-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. தங்கம் விலை கடந்த 4 நாட்களில் 3,360 அதிகரித்துள்ளது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் 245-க்கும், கிலோவுக்கு ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை உயர்வுக்கு சோலார் தகடுகள் தயாரிப்பு, எலக்ட்ரிக் கார் தயாரிப்பு, 5ஜி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள், செமி கண்டக்டர் சிப்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருவதும், தேவைக்கும், வினியோகத்துக்கும் இடைவெளி ஏற்படுவதும் வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/business/gold-silver-price-today-25-december-2025-chennai-in-tamil-10945394





