கனமழைக்கு வாய்புள்ள 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர் அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.
14 11 2023
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், தற்போது தெற்கு அந்தமான் கடல், தென்மேற்கு வங்கக்கடல் ஆகிய இரண்டு இடங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழைக்கு வாய்ப்புள்ள 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் துறை நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்த கடிதத்தில் “ கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பொதுமக்களுக்கு மழையால் ஏற்படும் அனைத்து இடையூறுகளையும் உடனடியாக சரி செய்ய வேண்டும். சென்னை வானிலை மையத்தின் எச்சரிக்கையின்படி, வருகின்ற ஒவ்வொரு நாட்களிலும் கனமழை, மிக கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/27-districts-collector-receives-alert-letter-from-department-of-revenue-1695197