ஞாயிறு, 5 நவம்பர், 2023

கோவை மத்திய சிறை கலவரம்... 7 கைதிகள் மீது வழக்கு பதிவு : கைதிகளிடம் வழக்கறிஞர் விசாரணை

 Coimbatore jail

கோயம்புத்தூர்

கோவை மத்திய சிறையில் கைதிகள் பேரை சிறைதுறையை சேர்ந்த யாரெல்லாம் தாக்கினார்கள் எந்த ஆயுதத்தால் தாக்கினார்கள் என்பது தொடர்பாக இன்று சிறைவளாகத்தில் பாதிக்கபட்ட கைதிகளிடம் கேட்டறிந்து இருப்பதாகவும் இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தெரிவிக்க இருப்பதாகவும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவை மத்திய சிறையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கைதிகளுக்கும் வார்டன்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக கைதிகள் 7 பேர் மீது ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  இதில் கைதிகள் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 

வழக்கு தொடர்பாக இன்று கோவை மத்திய சிறையில் கைதிகளை சந்தித்து பேசிய வழக்கறிஞர் புகழேந்தி சிறைவாயிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 21.9.23"ஆம் தேதி அதிகாலை 6.30"மணிக்கு கோவை மத்திய சிறை விசாரணை கைதிகள் 7" பேர் சிறை காவலர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டு பிளேடால் அறுக்கப்பட்டு தனிமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இது குறித்து உயர் நீதிமன்றம்உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்திரவிட்டுள்ளது. கைதிகள் 7" பேரை யார் யார் தாக்கினார்கள், எந்த ஆயுதத்தால் தாக்கினார்கள் என்பது தொடர்பாக இன்று சிறைவளாகத்தில் பாதிக்கபட்ட கைதிகளிடம் கேட்டறிந்து இருப்பதாகவும் இவற்றை நீதிமன்றத்தில் தெரிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் சிறை காவலர்கள் தாக்குதலில் கைதிகளுக்கு கை கால்களில் பாதிப்பு இருக்கிறது. கோவை மத்திய சிறை வார்டன்கள் ("சிவகுமார்கணேஷ்ராகுல் சடையன்கிருபாகரன்") உள்ளிட்ட ஆகிய காவலர்கள் கைதிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். சிறையில் மனித உரிமை மீறல்  ஏற்பட்டுள்ளது. சிறையில் தனியாக வார்டன் குழுவை வைத்து சிறை அதிகாரிகள் தொடர்ந்து கைதிகளை கொடுமைபப்படுத்தி வருகின்றனர். 

இந்த சம்பவத்தை கண்டித்து மனித உரிமை ஆர்வலர்கள் வருகிற வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்த உள்ளனர். சிறை என்பது சீர்திருத்தும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு கொடுமைப்படுத்த கூடிய சாடிஸ்ட்டாக ஆக சிறைகாவலர்கள் இருக்கிறார்கள். காவல்துறையை விட சிறை காவலர்கள் கொடுமையாக நடந்து கொள்கின்றனர்.

கோவை சிறையில் கைதிகள் மிக கொடூரமாக தாக்கப்பட்டுபிளேடால்  அறுக்கப்பட்டது என்பது எங்களையே பதைக்க பதைக்க வைக்கிறது. விசாரணை கைதிகளுக்கே இந்த நிலைமை.இது குறித்து நீதிமன்றத்தில் புகார் தெரிவித்ததால்அந்த கைதிகள் 7 பேர் மீது மீண்டும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர்தாக்குதல் நடத்திய வார்டன்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்அதுவரை சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடரும் என இவ்வாறு வழக்கறிஞர் புகழேந்தி  தெரிவித்தார்.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.


source https://tamil.indianexpress.com/entertainment/tamilnadu-coimbatore-central-jail-lawyer-pugazhenthi-meet-prisoners-1685024