இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் ஜோர்டான் வரைவுத் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்த இரண்டு வாரங்களுக்குள், தற்போது "கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியிலும், ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய கோலான் பகுதியிலும்" இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளைக் கண்டிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 145 நாடுகளில் இந்தியாவும் அடங்கும்.
கிழக்கு ஜெருசலேம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய கோலான் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசத்தில் இஸ்ரேலிய குடியேற்றங்கள்" என்ற தலைப்பில் ஐ.நா வரைவு தீர்மானம் நவம்பர் 9 அன்று பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்கா, கனடா, ஹங்கேரி, இஸ்ரேல், மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா மற்றும் நவுரு ஆகிய 7 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 18 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன.
இத்தீர்மானத்தின் மூலம், அப்பகுதிகளில் குடியேற்ற நடவடிக்கைகள், நிலத்தை அபகரித்தல், பாதுகாக்கப்பட்ட நபர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்தல், குடிமக்களை கட்டாயமாக இடம் மாற்றுதல் மற்றும் நிலத்தை இணைத்தல், அல்லது தேசிய சட்டத்தின் மூலம் எந்தவொரு நடவடிக்கையும் ஐ.நா கண்டித்தது.
அக்டோபர் 28 அன்று, உடனடி, நீடித்த மற்றும் மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஜோர்டானிய-வரைவுத் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.
இந்த தீர்மானத்தில் ஹமாஸ் என்ற தீவிரவாத அமைப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 121 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன. 44 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன.
மேலும் காசா பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை உடனடி, தொடர்ச்சியான, போதுமான மற்றும் தடையின்றி வழங்கவும் தீர்மானம் கோரியது.
நவம்பர் 9 ஆம் தேதி இந்தியாவின் வாக்கெடுப்பு இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில், டெல்லியின் பாரம்பரிய நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது, அங்கு பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளின் தீர்வுக்கு ஆதரவளித்துள்ளது. இது இஸ்ரேலுடன் சமாதானமாக, பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் வாழும் பாலஸ்தீனத்தின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் சாத்தியமான அரசை நிறுவ வழிவகுக்கிறது.
அக்டோபர் 28 ஆம் தேதி, வாக்களிக்காதபோது, பயங்கரவாதம் ஒரு “கொடுமை” என்றும், அதற்கு எல்லையோ, தேசியமோ, இனமோ தெரியாது என்றும், பயங்கரவாதச் செயல்களை எந்த ஒரு நியாயத்தையும் உலகம் கண்டுகொள்ளக் கூடாது என்றும் இந்தியா கூறியது.
source https://tamil.indianexpress.com/india/israel-hamas-war-india-supports-un-resolution-against-israeli-settlements-1694203