வியாழன், 25 டிசம்பர், 2025

ஏற்காடு மலைப் பாதையில் அதியமான் பெயரை அகற்றிவிட்டு பெரியார் பெயரா?

 

சேலத்திலிருந்து ஏற்காடுக்கு செல்லும் மலைப் பாதையில் 8வது கொண்டை ஊசி வளைவில் தகடூர் அதியமான் வளைவு என்ற பெயரை தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை, தந்தை பெரியார் வளைவு என்று பெயர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அங்கே தந்தை பெரியார் வளைவு என்ற பெயரை மறைத்து தகடூர் அதியமான் வளைவு என்று அச்சிடபட்ட பேனரை ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர்.

சேலம் மாவட்டத்தில் பிரபலமான சுற்றுலா இடம் ஏற்காடு. தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை, சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 8வது கொண்டை ஊசி வளைவில் தகடூர் அதியமான் வளைவு என்ற பெயரை தந்தை பெரியார் வளைவு என்று பெயர் மாற்றியது. இதற்கு நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/replacing-adhiyamans-name-with-periyars-name-on-the-yercaud-hair-pin-bend-ntk-members-protest-10945126