செவ்வாய், 30 டிசம்பர், 2025

JEE Advanced 2026: ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது? அட்டவணை வெளியிட்ட என்.டி.ஏ

 jee advanced 2026

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) ரூர்க்கி கூட்டு நுழைவுத் தேர்வு அட்வான்ஸ்டு (JEE Advanced) 2026 தேர்வுக்கான விரிவான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி, ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2026 தேர்வுக்கான ஆன்லைன் பதிவு ஜே.இ.இ மெயின் 2026 தேர்வில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி தொடங்கி, மே 2 ஆம் தேதி முடிவடையும். பதிவு செயல்முறை jeeadv.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மேற்கொள்ளப்படும். ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2026 தேர்வு மே 17 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதே நேரத்தில் இறுதி விடைக்குறிப்பு மற்றும் முடிவுகள் ஜூன் 1 ஆம் தேதி அறிவிக்கப்படும். அட்மிட் கார்டு வெளியீடு, விடைத்தாள் வெளியீடு, விடைக்குறிப்பு சவால் சாளரம் மற்றும் கட்டிடக்கலை திறன் தேர்வு (AAT) தொடர்பான முக்கிய தேதிகளும் அட்டவணையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2026: முழுமையான அட்டவணை 

ஜே.இ.இ மெயின் தேர்வு 2026 (தேசிய தேர்வு முகமையால் (NTA) கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும்) தேதிகள் – ஜே.இ.இ வலைதளத்தை பார்வையிடவும்

ஜே.இ.இ மெயின் தேர்வு முடிவுகள் – ஜே.இ.இ வலைதளத்தை பார்வையிடவும்

வெளிநாடு வாழ் மற்றும் OCI/PIO (F) மாணவர்களுக்கான ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2026 தேர்வுக்கான ஆன்லைன் நேரடி பதிவு - ஏப்ரல் 6, 2026, காலை 10 மணி முதல் மே 2, 2026, இரவு 11:59 மணி வரை

ஜே.இ.இ மெயின் 2026 தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கான ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வுக்கான ஆன்லைன் பதிவு - ஏப்ரல் 23, 2026, காலை 10 மணி முதல் மே 2, 2026, இரவு 11:59 மணி வரை

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி - மே 4, 2026, இரவு 11:59 மணி வரை

அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்யும் காலம் - மே 11, 2026, காலை 10 மணி முதல் மே 17, 2026 வரை (14:30 IST)

மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான உதவி எழுத்தர்களை தேர்வு செய்யும் தேதி - மே 16, 2026

ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு நடைபெறும் தேதி - மே 17, 2026

தாள் 1: காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை

தாள் 2: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை

விடைத்தாள் ஆன்லைனில் வெளியிடும் தேதி - மே 21, 2026, மாலை 5 மணி வரை 

தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியிடும் தேதி - மே 25, 2026, காலை 10 மணி

தற்காலிக விடைக்குறிப்புகள் குறித்த கருத்துக்கள் சமர்பிக்கும் காலம் - மே 25, 2026, காலை 10 மணி முதல் மே 26, 2026, மாலை 5 மணி வரை

இறுதி விடைகுறிப்பு மற்றும் முடிவுகள் வெளியாகும் தேதி - ஜூன் 1, 2026, காலை 10 மணி வரை

AAT 2026 தேர்வுக்கான ஆன்லைன் பதிவு - ஜூன் 1, 2026, காலை 10 மணி முதல் ஜூன் 2, 2026, மாலை 5 மணி வரை

JoSAA 2026 கவுன்சிலிங்கின் தற்காலிக தொடக்கம் - ஜூன் 2, 2026, மாலை 5 மணி வரை

கட்டிடக்கலை திறன் தேர்வு (AAT) 2026 நடைபெறும் தேதி - ஜூன் 4, 2026 காலை 9 முதல் மதியம் 12 மணி வரை

AAT 2026 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி - ஜூன் 7, 2026 மாலை 5 மணி

ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு என்பது இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (IIT) இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் ஜே.இ.இ முதன்மைத் தேர்வு 2026 இல் தகுதி பெறுபவர்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படும்.



source https://tamil.indianexpress.com/education-jobs/jee-advanced-2026-schedule-out-iit-roorkee-to-begin-registration-from-april-23-results-by-june-10956493