வியாழன், 18 டிசம்பர், 2025

சிங்கப்பூரில் வேலை பார்க்க விருப்பமா? இந்த 2 தகுதி ரொம்ப முக்கியம்; இல்லாட்டி 'நோ' பர்மிஷன்!

 

work

இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்கள் சிங்கப்பூரில் அதிகம் பணிப்புரிந்து வருகின்றனர். சிங்கப்பூரில் நிறுவனங்கள் தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவும் இந்தியர்கள் வீடியோ பகிர்ந்து தெரிவித்திருந்தார். சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டு மக்களுக்கு 2 தகுதிகள் முக்கியமாக இருக்க வேண்டும். முதலில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு பாஸ் ( Employment Pass ) பெற வேண்டும். இதற்கு சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் அல்லது நம்மை நியமிக்கும் தொழில் நிறுவனங்கள் பணியாளரின் சார்பில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜூன் 2025 நிலவரப்படி, சிங்கப்பூரில் இ.பி ( Employment Pass ) கொண்டு பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் சுமார் 201,200 பேர் இருப்பதாக கூறப்படுகிறது. இ.பி விண்ணப்பத்திற்கு வெளிநாட்டு பணியாளர்கள் இரண்டு கட்டங்களை கடந்து செல்ல வேண்டும். 

  • சம்பள அளவுகோலை (salary benchmark) பூர்த்தி செய்ய வேண்டும்
  • புள்ளி அடிப்படையிலான (Complementarity Assessment Framework ) மதிப்பீட்டில் தேர்ச்சி பெற வேண்டும்

சம்பள அளவுகோல்

சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் பணியமர்த்த உள்ள வெளிநாட்டு பணியாளரின் நிலையான மாத சம்பளம், உள்ளூர் தொழில்முனைவோர், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோரின் சம்பளங்களில்  மேல் மூன்றில் ஒரு பகுதி அளவிற்கு இணையானதாக இருக்க வேண்டும். சிங்கப்பூர் இ.பி   பெறுவதற்கு முன், வெளிநாட்டு பணியாளர்கள் முன் நிர்ணயிக்கப்பட்ட வருமானத் தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும். இ.பி  தகுதி பெற, வெளிநாட்டு ஊழியர்கள் அந்நாட்டு பணத்தின் மதிப்பிற்கு  மாதம் 5,600 சம்பளம் பெற வேண்டும்.

இ.பி  சம்பள அளவுகோல், 23 வயதுடையவர்களுக்கு 5,600 முதல் தொடங்கி, வயது அதிகரிக்கும் போது படிப்படியாக உயர்ந்து, 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 10,500 வரை உள்ளது. நிதி சேவைத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தகுதி பெற, இதைவிட அதிக சம்பளம் பெற வேண்டும். புதிய விண்ணப்பங்களுக்கான இ.பி தகுதி சம்பளம் குறைந்தது 5,600 ஆகவும், நிதி சேவைத் துறைக்கு 6,200 ஆகவும் திருத்தப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட இ.பி தகுதி சம்பளம் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காலாவதியாகும் இ.பி  புதுப்பிப்புகளுக்கும் பொருந்தும்.

புள்ளி அடிப்படையிலான மதிப்பீடு

பணியாளர்கள் புள்ளி அடிப்படையிலான  மதிப்பீட்டில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற உங்கள் விண்ணப்பங்கள் குறைந்தது 40 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். சம்பள அளவுகோலை பூர்த்தி செய்யாதவர்கள், புள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டில் எத்தனை புள்ளிகள் பெற்றிருந்தாலும், இ.பி பெற தகுதியற்றவர்களாகவே கருதப்படுவர்.


source https://tamil.indianexpress.com/international/looking-to-work-in-singapore-here-are-the-details-10917948