வியாழன், 25 டிசம்பர், 2025

வைப்' நிகழ்ச்சி கேள்விகளுக்கு ஸ்டாலின் பதில்

 mk

இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் ‘வைப் நிகழ்ச்சி’ நேற்று (டிச.24) ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “நான் வரும் போது பார்த்துக் கொண்டு வந்தேன். 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கையில் போனை வைத்துக் கொண்டு அதனை பார்த்துக் கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்கள் போன் பார்ப்பதில் அதிகம் கவனம் செலுத்துவதோடு வாய்ப்பு கிடைக்கும் போதும், ஒய்வு கிடைக்கும் போதும் விளையாட்டு துறையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் என் ஆசை. 

தோல்வியை கண்டு துண்டுவிடக் கூடாது. அதை படிக்கட்டாக நினைத்துக் கொண்டு நாம் அதில் ஏறி செல்ல வேண்டும். அதேபோன்று தான் விளையாட்டு வீரர்களை பொருத்தவரை வெற்றி பெற முடியவில்லையே என்ற ஆதங்கம் வந்துவிடக் கூடாது, ஏக்கம் வந்து விடக்கூடாது. விடாமுயற்சியுடன் நீங்கள் இந்த அளவிற்கு வந்திருக்கிறீர்கள். அதேபோன்று மற்ற வீரர்களும் வரக்கூடிய விளையாட்டு வீரர்களும் அதையே பின்பற்ற வேண்டும் என்பது என் ஆசை” என்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




source https://tamil.indianexpress.com/tamilnadu/vibe-show-cm-mk-stalin-message-to-youngsters-10945238