12 01 2026
/indian-express-tamil/media/media_files/2026/01/11/budget-2026-2026-01-11-22-10-30.jpg)
ரூ.12 லட்சம் வருமானம் இருந்தாலும் வரி கட்ட நேரிடும்; ஏன் தெரியுமா? - பட்ஜெட் 2026 அப்டேட்!
சமீபத்திய ஆண்டுகளில் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய சலுகைகளில் ஒன்று, புதிய வரி முறையின் கீழ் ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வருமான வரி இல்லை என்ற அறிவிப்பாகும். ஆனால், இந்த ரூ.12 லட்சம் சலுகையில் ஒரு முக்கிய நிபந்தனையை (Fine Print) பல வரி செலுத்துவோர் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.
பட்ஜெட் 2025 என்ன சொன்னது?
புதிய வரி முறையில் சலுகை: ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. சம்பளம் பெறுபவர்களுக்கு வழங்கப்படக்கூடிய ரூ.75,000 நிலையான கழிவு (Standard Deduction) காரணமாக, உண்மையில் ரூ.12.75 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும். இந்த வரி விலக்கு பலன் சம்பளம், ஓய்வூதியம் அல்லது வணிக வருமானம் போன்ற சாதாரண வருமானத்திற்கு மட்டுமே பொருந்தும். பங்குகள் அல்லது சொத்து விற்பனை மூலம் கிடைக்கும் 'மூலதன ஆதாயம்' போன்ற சிறப்பு விகித வருமானங்களுக்கு இந்த வரி விலக்கு பொருந்தாது.
புதிய வருமான வரி விகிதங்கள் (பட்ஜெட் 2025-ன் படி)
/indian-express-tamil/media/post_attachments/7d11892b-6c1.png)
மேற்கண்ட அடுக்குகளுடன் (Slabs), அரசு வழங்கும் வரி தள்ளுபடி (Rebate) காரணமாக, ₹12 லட்சம் வரை சாதாரண வருமானம் கொண்டவர்கள் பூஜ்ஜிய வரி (Zero Tax) செலுத்தினால் போதும். சிறப்பு விகித வருமானம் என்பது உங்க மொத்த வருமான வரி அடுக்குகளை பொருட்படுத்தாமல், நிலையான சதவீதத்தில் வரி விதிக்கப்படும் வருமானம் ஆகும்.
நீண்ட கால மூலதன ஆதாயம் (LTCG), குறுகிய கால மூலதன ஆதாயம் (STCG), சில குறிப்பிட்ட சொத்துகள் மற்றும் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம். உங்க மொத்த வருமானம் ரூ.12 லட்சத்திற்குள் இருந்தாலும், இந்த மூலதன ஆதாயங்களுக்கு நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
முழு வருமானமும் சம்பளமாக இருந்தால் (வரி இல்லை) சம்பள வருமானம் ₹12,75,000 நிலையான கழிவு: ₹75,000 (-) வரிக்குரிய வருமானம்: ₹12,00,000 இது முழுமையாகச் சாதாரண வருமானம் என்பதால், வரிச் சலுகை (Rebate) முழுமையாகக் கிடைக்கும். செலுத்த வேண்டிய வரி = 0.
வருமானத்தில் மூலதன ஆதாயம் இருந்தால் (வரி உண்டு) சம்பள வருமானம் ₹9,00,000 நீண்ட கால மூலதன ஆதாயம் ₹3,00,000 மொத்த வருமானம் ₹12,00,000
சம்பள வருமானத்திற்கு வரிச் சலுகை கிடைக்கும். ஆனால், மூலதன ஆதாயத்திற்கு (Capital Gains) சிறப்பு வரி விகிதத்தின் கீழ் வரி செலுத்த வேண்டும். மொத்த வருமானம் ரூ.12 லட்சத்திற்குள் இருந்தாலும், நீங்க வரி கட்ட வேண்டியிருக்கும். வருமான வரித் தாக்கல் (ITR) செய்யும்போது பலருக்கு இது அதிர்ச்சியைத் தருகிறது.
source https://tamil.indianexpress.com/business/budget-2026-your-rs-12-lakh-annual-income-isnt-fully-tax-free-if-it-includes-this-component-10990268





