திங்கள், 12 ஜனவரி, 2026

சிங்கார சென்னை அட்டை இனி பேருந்து நடத்துனர்களிடமே வாங்கலாம்: போக்குவரத்துத் துறை அறிவிப்பு

 

சிங்கார சென்னை அட்டை இனி பேருந்து நடத்துனர்களிடமே வாங்கலாம்: போக்குவரத்துத் துறை அறிவிப்பு 12 01 2026 

Chennai bus

இதுவரை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைத்து வந்த இந்த அட்டைகளை, இனி பயணிகள் பேருந்து நடத்துனர்களிடமே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யப் பயன்படுத்தப்படும் 'சிங்கார சென்னை' அல்லது 'தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை' (NCMC) தொடர்பான புதிய வசதியை போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதுவரை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைத்து வந்த இந்த அட்டைகளை, இனி பயணிகள் பேருந்து நடத்துனர்களிடமே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்த அட்டையை 100 ரூபாய் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம் என்றும், அதில் 50 ரூபாய்க்குப் பயணம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பயணிகள் தேவைக்கேற்ப ஆன்லைன் மூலம் கூடுதல் ரீசார்ஜ் செய்து தங்களது பயணத்தைத் தடையின்றித் தொடரலாம் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய பயன்படுத்தும் சிங்கார சென்னை அல்லது தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையை இனி பேருந்து நடத்துனர்களிடமும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.100 செலுத்தி வாங்கும் அட்டையை பயன்படுத்தி ரூ.50 பயணம் செய்யலாம் என்றும், ஆன்லைன் மூலம் கூடுதல் ரீசார்ஜ் செய்து பயணத்தை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/singara-chennai-ncmc-card-available-with-bus-conductors-mtc-metro-recharge-details-10990478