சனி, 30 ஏப்ரல், 2022

புதிய உச்சம் தொட்ட மின்சார தேவை…. எவ்வளவு மெகாவாட் தெரியுமா?

 30 4 2022 தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகப்பட்ச மின்சார பயன்பாடு பதிவாகியுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், வியாக்கிழமை அன்று சுமார் 387.047 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் முந்தைய அதிகபட்ச மின் பயன்பாடு கடந்த மார்ச் மாதம் 29 அன்று 378.328 மில்லியன் யூனிட் ஆகும் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர், மாநிலத்தின் அதிகபட்ச மின்சார தேவையாக மார்ச் 29 அன்று பதிவான 17,196 மெகாவாட் கருதப்பட்டு வந்த நிலையில், வியாக்கிழமை அன்று மின்சார தேவை 17,370 மெகாவாட்டை எட்டியுள்ளது. அதேசமயம், மின்சாரம் தடையின்றி நுகர்வோரின் மின்சார தேவை பூர்த்தி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

டாங்கெட்கோவின் மூத்த அதிகாரி ஒருவர் நாளிதழுக்கு அளித்த தகவலின்படி, கோடை காலம் என்பதால் வரும் நாட்களில் மின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

நிச்சயம் 17,500 மெகாவாட் அல்லது அதற்கு மேல் செல்லக்கூடும். அதே நேரம் மின்சார தேவை அதிகரித்தாலும், அதனை நிச்சயம் பூர்த்தி செய்து தடையின்றி மின்சாரம் வழங்குவோம் என்றார்.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, பல மாநிலங்களில் மின்சார தேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/power-demand-increased-in-tamilnadu-447688/