கூகுள் குரோம் உலகம் முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்படும் ப்ரௌசர் ஆகும். எனினும் இதில் அவ்வப்போது குரோம் பக்கங்கள் பயன்படுத்தும் போது தளம் ஸ்லோவாகி விடும். Loading என்று வரும். இந்த பிரச்சனையை தவிர்க்க சில டிப்ஸ் இங்கே கொடுக்கப்படுகிறது. அதாவது இது குரோம் பயன்படுத்தும் முன்பே ட்ரை செய்ய வேண்டும். வெப்ஷைட் கிளிக் செய்யும் முன் இதை செய்யுங்க.
இது எப்படி வேலை செய்கிறது?
குரோமில் Preloading அம்சம் இணையப் பக்கங்களை பேக் கிரவுண்டில் லோடு ஆகும். நீங்கள் அதை பயன்படுத்தும் முன் இதை செய்யும். எனவே நீங்கள் அந்த லிங்க்கை கிளிக் செய்யும் போது, அந்தப் பக்கம் ஏற்கனவே அங்கு இருக்கும் நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை.
நீங்கள் அடுத்து பார்க்கப் போகும் இணையதளத்தை கூகுள் குரோம் சில ஸ்மார்ட் அல்காரிதம்களைப் பயன்படுத்தி முன்பே கணித்து வேலை செய்கிறது. நீங்கள் வெப் பக்கம் பயன்படுத்தும் முன் இது திரைக்குப் பின்னால் ரகசியமாக செயல்படுகிறது.
மொபைலில் ப்ரீலோடிங் (preloading ) எப்படி இயக்குவது?
1. குரோம் பக்கத்தில் 3 புள்ளி ஐகானை கிளிக் செய்து செட்டிங்ஸ் செல்லவும்.
2. “Privacy and security” சென்று “Preload pages” கிளிக் செய்யவும்.
3. “Standard preloading” or “Extended preloading” செலக்ட் செய்யவும்.
உங்கள் வரலாறு மற்றும் குக்கீகளின் அடிப்படையில் நீங்கள் அடுத்து வரலாம் என்று Chrome நினைக்கும் பக்கங்களை “ஸ்டாண்டர்ட்” மோட் லோடு செய்கிறது. “Extended” மோட், நீங்கள் இதற்கு முன் பார்க்காத பக்கங்களை முன் ஏற்றுவதன் மூலம் ஒரு படி மேலே செல்கிறது. பிந்தையது இன்னும் கொஞ்சம் டேட்டாவைப் பயன்படுத்துகிறது என்பதை நினைவில் கொள்க.
source https://tamil.indianexpress.com/technology/how-to-load-websites-on-chrome-4499934